டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மத்தியில் 427 விக்கெட்டுகளுடன் 3வது இடத்தில் தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நல்ல ரெக்கார்டு வைத்திருக்கிறார். சுமார் 200க்கும் அதிகமான விக்கெட்டுகளை அவர் இடது கை பேட்ஸ்மேன்கள் வாயிலாக கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரையில் 78 இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசியிருக்கிறார். அதில் ஒன்பது பேட்ஸ்மேன்கள் மட்டுமே இவருடைய விக்கெட்டுக்கு ஆளாகாமல் தப்பித்து இருக்கின்றனர் என்பது மிகவும் வினோதமான விஷயமாகும். தற்பொழுது அந்த ஒன்பது வீரர்கள் மத்தியில் தலைசிறந்த நான்கு நட்சத்திர வீரர்களைப் பற்றி தற்போது பார்ப்போம்.
க்ரீம் ஸ்மித் – 7.2 ஓவர்கள்
முன்னாள் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் க்ரீம் ஸ்மித் மிகவும் பெயர் போன லெஜன்ட் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ஒருவர். குறிப்பாக இடது கை ஆட்டக்காரர்கள் மத்தியில் மிகச் சிறப்பாக விளையாடிய வீரர்களில் அவரும் ஒருவர். 2010ஆம் ஆண்டு அவர் இந்திய மண்ணில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் ஹர்பஜன் சிங் தான் ஸ்பின் பந்து முதன்மை ஸ்பின் பந்து வீச்சாளராக விளையாடினார்.
இவர் அஸ்வினுக்கு எதிராக இந்தியாவில் ஒரு முறை கூட விளையாடியது இல்லை. ஆனால் 2013ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க மண்ணில் இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டி நடந்தது. சுமார் 7.2 ஓவர்கள் அஸ்வின் பந்துவீச்சை தாக்கு பிடித்து அவுட்டாகாமல் ஸ்மித் வெற்றி அடைந்திருக்கிறார்.
மைக்கேல் ஹசி – 31 ஓவர்கள்
இந்திய ரசிகர்களுக்கு இவர் மிகவும் பரிச்சயமான ஒரு கிரிக்கெட் வீரர் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஐபிஎல் தொடரில் நிறைய போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த இடதுகை பேட்ஸ்மேன்கள் மத்தியில் இவரும் முக்கிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் ஹசி இந்திய மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை மேற்கொண்டு இருக்கிறார். சுமார் 31 ஓவர்கள் அஸ்வின் மைக்கேல் ஹசிக்கு எதிராக வீசிய போதிலும், இறுதியில் வெற்றி பெற்றது மைக்கேல் ஹசியே. ஐபிஎல் தொடரில் இவர்கள் இருவரும் ஒரே அணியில் விளையாடிய காரணத்தினால், அஸ்வின் பந்து வீச்சை பற்றி மைக்கேல் ஹசி நன்கு தெரிந்து வைத்து இருக்க வாய்ப்பு உண்டு. அந்த அனுபவம் அவருக்கு அவுட் ஆகாமல் இருக்க கைகொடுத்து இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
டேவிட் மலான் – 6 ஓவர்கள்
இங்கிலாந்து அணியின் தற்போதைய முக்கிய பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் டேவிட் மலான் இந்தியாவுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இருப்பினும் 2018ஆம் ஆண்டு மட்டுமே இவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டி நடைபெற்றது.
அந்த ஆண்டு சுமார் 36 பந்துகள் ரவிச்சந்திரன் அஸ்வின் இவருக்கு எதிராக வீசியிருக்கிறார். அந்த அத்தனை பந்துகளையும் தாக்குப்பிடித்து விக்கெட்டை இழக்காமல் டேவிட் மலானே
இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
சிம்ரோன் ஹெட்மையர் – 6.2 ஓவர்கள்
மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரரான ஹெட்மையர் 4 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி இருக்கிறார். அதில் இரண்டு டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்தியாவிலும் நடைபெற்றது.
ஸ்மித் போலவே இவரும் இந்திய மண்ணில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக விளையாடியது இல்லை. இருப்பினும் மேற்கு இந்தியத் தீவுகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை மிகவும் சாமர்த்தியமாக தாக்குபிடித்து சுமார் 6.2 ஓவர்கள் அவுட்டாகாமல் தப்பித்து இருக்கிறார்.
அந்த டெஸ்ட் தொடரில், ரவிச்சந்திரன் அஸ்வினிடம் இருந்து ஹெட்மையர் தப்பித்து இருந்தாலும், குல்தீப் யாதவிடம் மூன்று முறை தனது விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.