கடைசி உலக கோப்பையில் விளையாட போகும் 4 பிரபல கிரிக்கெட் வீரர்கள்?

0
3762

கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய தொடர் என்றால் அது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ சி சி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தான். ஒரு முறையாவது அந்த தங்க நிற கோப்பையை வாங்கி விட வேண்டும் என்பதுதான் பல வீரர்களின் கனவாக இருந்திருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியிலும் உலகக் கோப்பை ஒரு முறையாவது வெல்ல வேண்டும் என்பதற்காக பல வீரர்கள் காத்திருக்கிறார்கள். இதில் சில வீரர்களுக்கு கடைசி உலக கோப்பை தொடர் இதுவாக கூட இருக்கலாம்.
இந்த நிலையில் வரும் 2021 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் எந்த வீரர்களுக்கு கடைசியாக இருக்கும் என்பது தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

ரோகித் சர்மா

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தற்போது 36 வயதாகிறது. கடந்த உலகக்கோப்பை தொடரில் 5 சதங்கள் அடித்து ரோகித் சர்மா அசத்திய நிலையில், இதுதான் அவருக்கு கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும். அடுத்த முறை விளையாடும் போது அவருக்கு 40 வயதாகிவிடும். இதனால் அடுத்த உலக கோப்பையில் ரோகித் சர்மா விளையாடுவது சந்தேகம்.எனினும் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலககோப்பை, 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் கோப்பை ஆகிய தொடரில் ரோகித்  விளையாடக் கூடும்.

டேவிட் வார்னர்

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் டேவிட் வார்னர்.  வார்னருக்கு தற்போது 36 வயதாகி விட்டது. அவர் ஏற்கனவே உலகக்கோப்பை வென்று இருந்தாலும்,  நடப்பாண்டு உடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ள வார்னர் உலகக்கோப்பை வென்ற கௌரவத்துடன் செல்ல வேண்டும் என நினைக்கிறார்.

மோயின் அலி

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் மோயின் அலி. இவருக்கு தற்போது 35 வயதாகிறது அடுத்த உலகக் கோப்பை நடைபெறும் போது இவருக்கு 39 ஆகிவிடும். இதனால் அப்பொழுது விளையாடுவது சாத்தியம் இல்லை. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற மோயின் அலி, இந்த உலகக் கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

முகமது நபி

இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருப்பவர் முஹம்மது நபி. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் காட்ஃபாதர் என்று அழைக்கப்படும் முகமது நபிக்கு தற்போது 38 வயதாகிறது. அடுத்த உலகக் கோப்பை வரும்போது அவருக்கு 42 வயது ஆகிவிடும்.

அதனால் அப்போது விளையாடுவது எளிதான காரியம் கிடையாது என்பதால் இதுவே அவருக்கு கடைசி உலககோப்பை ஆகும். இதில் ஆப்கானிஸ்தான் நாக் அவுட் சுற்று வரைக்கும் கொண்டு சென்று நபி வரலாறு படைப்பாரா என்பதே ஆப்கான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.