3வது டெஸ்ட்.. மழை பாதிப்பு இருக்கிறதா?.. ஆடுகளம் மற்றும் மைதான புள்ளி விபரங்கள்.. முழு தகவல்கள்

0
221
ICT

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை குஜராத் ராஜ்கோட் சௌராஷ்டிரா அசோசியேஷன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகள் தலா ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் இருக்கின்றது. இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது.

- Advertisement -

எனவே இந்த போட்டியை எந்த அணி வெல்கிறதோ அந்த அணி தொடரை வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருக்கும். இதன் காரணமாக இரண்டு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை எல்லா தொடரிலும் முதலில் கடுமையான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி, என்னென்ன தவறுகள் செய்கிறார்களோ அதை படிப்படியாக சரி செய்யக்கூடியவர்கள். உள்நாட்டில் நடைபெற்ற ஆசஸ் முதல் தற்போது இந்தியாவில் நடக்கும் தொடர் வரை அதைத்தான் செய்கிறார்கள். எனவே நாளைய போட்டியிலும் ஏற்கனவே செய்த தவறுகளை செய்ய மாட்டார்கள் என நம்பலாம்.

இந்திய அணிக்கு தற்பொழுது கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா திரும்பி வந்திருப்பது விராட் கோலி இல்லாததால் ஏற்பட்ட பலவீனத்தை குறைப்பதற்கு வழி செய்கிறது. தற்போதைய ஒரே பிரச்சனை பேட்ஸ்மேன்கள் கிடைக்கின்ற நல்ல துவக்கத்தை பயன்படுத்தி பெரிய ரன்கள் அடிக்க வேண்டும் என்பதுதான்.

- Advertisement -

குஜராத் ராஜ்கோட் மைதான ஆடுகளத்தை பொருத்தவரையில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருந்து வந்திருக்கிறது. இங்கு இந்தியா அதிகபட்சமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன்கள் எடுத்திருக்கிறது. குறைந்தபட்சமாக வெஸ்ட் இண்டிஸ் 181 ரன்கள் எடுத்திருக்கிறது.

தனிநபர் பேட்ஸ்மேன் அதிகபட்சமாக இந்த மைதானத்தில் விராட் கோலி 139 ரன்கள் எடுத்திருக்கிறார். குல்தீப் யாதவ் தனிநபர் பவுலராக 57 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த மைதானத்தில் அதிகபட்சம் மொத்தமாக ஒன்பது விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : “ஆஸி இந்த முறை களத்திலும் பேப்பரிலும் நல்லா இருந்தது” – வார்னரை சீண்டும் முகமது கைப்

மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கும் ஐந்து நாட்களிலும் மழை அச்சுறுத்தல் கிடையாது. இங்கு அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கும் என கூறப்பட்டு இருக்கிறது. எனவே ரசிகர்களுக்கு நல்ல கிரிக்கெட் போட்டி காத்திருக்கிறது.