“ஆஸி இந்த முறை களத்திலும் பேப்பரிலும் நல்லா இருந்தது” – வார்னரை சீண்டும் முகமது கைப்

0
42
Kaif

2013 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் வீழ்த்தி உலகக் கோப்பையை கைப்பற்றியது.

இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. பிறகு தொடர்ச்சியாக மற்ற போட்டிகளை வென்று உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.

- Advertisement -

அதே சமயத்தில் இந்திய அணி எல்லா போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து கோப்பையை பரிதாபமாக இழந்தது. இது தற்பொழுதும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பெரிதும் பாதிக்கும் நிகழ்வாக அமைந்திருக்கிறது.

அப்போது முகமது கைஃப் ஆஸ்திரேலியாவை விட சிறந்த அணி தோற்றுவிட்டது எனக் கூறியிருந்தார். இது ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரின் கண்ணில் பட, பேப்பரில் இருப்பதைவிட களத்தில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதாக பதிலடி கொடுத்திருந்தார்.

- Advertisement -

அப்பொழுது முகமது கைஃப் ஆஸ்திரேலியா நன்றாகத்தான் விளையாடியது, ஆனால் தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக இருந்தது இந்திய அணி தான் என்றும் கூறி அந்த பிரச்சனையை முடித்து இருந்தார்.

தற்பொழுது அண்டர் 19 உலகக் கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி மீண்டும் ஒரு உலக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

இதையும் படிங்க : U19 உலககோப்பை பைனல்.. இந்திய அணியின் தோல்விக்கு முக்கியமான 3 காரணங்கள்

இதற்கு வாழ்த்துச் சொன்ன முகமது கைஃப் டேவிட் வார்னரை மனதில் வைத்து “19 வயதுக்கு உட்பட்ட அணிகளின் முடிவுகள் பெரிய விஷயம் கிடையாது. நீண்ட பயணத்தில் தங்களுக்கு உதவும் விஷயங்களை எதிர்கால நட்சத்திரங்கள் கற்றுக் கொள்கிறார்கள். இந்தியா நன்றாக விளையாடியது. இந்த முறை ஆடுகளத்திலும் பேப்பரிலும் ஆஸ்திரேலியா அணி சிறப்பாக இருந்தது” என்று சொல்ல வேண்டும் என கூறியிருக்கிறார்.

- Advertisement -