“364 ரன்.. நாங்க இன்னும் கொஞ்சம் அடிச்சிருக்கனும்.. இந்தியாவுல இதுதான் தலைவலி!” – ஜோஸ் பட்லர் பேச்சு!

0
14986
Buttler

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகச் சாம்பியன் இங்கிலாந்து அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் எதிர்பாராத விதமாக நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

இதற்கு அடுத்து இன்று பங்களாதேஷ் அணியை இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் சந்தித்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதோடு அவர்களுடைய வழக்கமான அதிரடி அணியின் அணுகு முறையில் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பது அந்த அணியின் எண்ணமாக இருந்தது.

- Advertisement -

இங்கிலாந்து திட்டமிட்டபடியே இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 364 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் இடதுகை பேட்ஸ்மேன் டேவிட் மலான் 140 ரன்கள் குவித்து அசத்தினார். பேர்ஸ்டோ மற்றும் ஜோ ரூட் இருவரும் அரை சதம் அடித்தார்கள்.

இதற்கு அடுத்து பந்துவீச்சில் இந்த முறை உள்ளே கொண்டு வந்த ரீஸ் டாப்லி ஆரம்பத்திலேயே மிகச் சிறப்பாக ஸ்விங் பந்துவீச்சின் மூலம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேலும் அவர் இன்றைய போட்டியில் 10 ஓவர்கள் பந்துவீசி, ஒரு மெய்டன் செய்து, 43 ரன்கள் மட்டும் விட்டுத்தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். பங்களாதேஷ் அணி 227 ரன்களுக்கு சுருண்டு தோற்றது.

இதன் மூலம் முந்தைய ஆட்டத்தில் 286 ரன்களை 37 ஓவரில் நியூசிலாந்துக்கு விட்டுக் கொடுத்து மோசமான ரன் ரேட் பெற்றதை, பங்களாதேஷை வைத்து இங்கிலாந்து இந்த முறை ஈடு கட்டிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

வெற்றிக்குப் பின் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறும் பொழுது ” உண்மையில் இது நல்ல செயல்திறன். நாங்கள் எங்களுடைய அடிப்படையில் ஒட்டிக்கொண்டோம். எங்களின் முதல் மோசமான செயல் திறனுக்கு பின்னால் இது முக்கியமானது. நாங்கள் ஆட்டத்தின் பிற்பகுதியில் இன்னும் ஸ்கோர் செய்திருக்க வேண்டும். பின்பகுதியில் சில நல்ல பார்ட்னர்ஷிப் இருந்திருக்க வேண்டும்.

முதல் ஆட்டத்திற்குப் பிறகு டேவிட் மலான் எழுந்து நின்று ஒரு பெரிய சதத்தை பெறுவது சிறப்பான ஒன்று. நாங்கள் எப்பொழுதும் சரியான செயல் திறனை தேடுகிறோம். ஆனால் அது எத்தனை முறை சரியாக வேலை செய்கிறது என்று நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை.

கண்டிஷன் மற்றும் பிட்ச்சை ரீட் செய்வதுதான் இங்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலான விஷயம். எங்களிடம் அருமையான சமநிலையான அணி இருக்கிறது. ஸ்விங் மற்றும் ஸ்பின் இரண்டின் சரியான கலவையாகும். இன்று ரீஸ் டாப்லி உள்ளே வந்து செயல்பட்ட விதம் மிகச் சிறப்பாக இருந்தது!” என்று கூறி இருக்கிறார்!