36 ரன்கள்.. 8 விக்கெட்.. பாகிஸ்தானை அடித்து சுருட்டிய இந்தியா.. 2011 உலக கோப்பை வரலாறு திரும்பியது!

0
513
Bumrah

இந்திய அணி இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது!

இந்தப் போட்டியில் முதலில் டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீசுவது என தீர்மானித்தார். இந்திய அணியில் பில் உள்ளே வர இசான் வெளியே சென்றார். பாகிஸ்தான் அணியில் மாற்றம் இல்லை.

- Advertisement -

பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் விக்கெட் இழப்பில்லாமல் பாகிஸ்தான் அணி 41 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்த பொழுது, அப்துல்லா ஷபிக் விக்கெட்டை, அவர் 20 ரன்கள் எடுத்திருந்தபொழுது முகமது சிராஜ் வீழ்த்தி முதல் சரிவை ஆரம்பித்து வைத்தார். இதற்கு அடுத்து இமாம் உல் ஹக் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சேர்ந்து அணியை கரை சேர்க்க முயற்சி செய்தனர். இந்த ஜோடி 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இந்த நிலையில் மீண்டும் திரும்பி வந்த முகமது சிராஜ் 58 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த பாபர் அசாமை கிளீன் போல்ட் செய்தார். அடுத்து முகமது ரிஸ்வான் 69 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா கிளீன் போல்ட் செய்தார்.

- Advertisement -

இதற்கு அடுத்து சீட்டுக்கட்டு சரிவது போல பாகிஸ்தான அணி அப்படியே சரிந்தது. அந்த அணியின் சவுத் ஷகில் 6, இப்திகார் அகமத் 4, சதாப் கான் 2, முகமது நவாஸ் 4, ஹசன் அலி 12, ஹாரிஸ் ரவுப் 2, ஷாகின் அப்ரிடி 2* ரங்கள் எடுக்க 42.5 ஓவரில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து, 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியின் தரப்பில் பந்து வீசிய ஆறு பந்துவீச்சாளர்களில், ஐந்து பந்துவீச்சாளர்கள் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். சர்துல் தாக்கூர் இரண்டு ஓவர் மட்டும் வீசி, அவருக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை.

பும்ரா ஏழு ஓவர்களுக்கு 29 ரன்கள் இரண்டு விக்கெட். ஹர்திக் பாண்டியா ஆறு ஓவர்களுக்கு 34 ரன்கள் இரண்டு விக்கெட். குல்தீப் யாதவ் 10 ஓவர்களுக்கு 35 ரன்கள் இரண்டு விக்கெட். ரவீந்திர ஜடேஜா 9.5 ஓவர்கள் 38 ரன்கள் இரண்டு விக்கெட். முகமது சிராஜ் எட்டு ஓவர்கள் 50 ரன்கள் இரண்டு விக்கெட் என கைப்பற்றினார்கள்.

உலகக்கோப்பையில் ஐந்து இந்திய பந்துவீச்சாளர்கள் ஒரே போட்டியில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஜாகீர் கான், நெக்ரா, முனாப் படேல், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் ஆகிய ஐந்து 10 வீச்சாளர்கள் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தார்கள்.