33ஓவர்.. தமிழ்நாடு 162ரன்.. தனி ஆளாக காப்பாற்றிய நடராஜன்.. தினேஷ் கார்த்திக், ஷாருக்கான் அபாரம்!

0
19903
Natarajan

தற்போது உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 38 அணிகள் பங்கு பெறுகிறது. மேலும் தமிழ்நாடு ஐந்து முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பை வென்ற அணியாக இருக்கிறது.

விஜய் சங்கர் தமிழ்நாடு அணியை வழிநடத்தி வந்த வேளையில், நடப்பு தொடருக்கு தினேஷ் கார்த்திக் தமிழக அணியின் கேப்டனாக பொறுப்பேற்று நடத்துகிறார். இவருக்கு வருகின்ற ஐபிஎல் தொடருக்கு இது ஒரு நல்ல பயிற்சியாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தமிழக அணியில் மேலும் ஷாருக்கான், நாராயணன் ஜெகதீசன், நடராஜன் போன்று வெளியில் ரசிகர்களால் அறியப்பட்ட முக்கிய வீரர்கள் விளையாடுகிறார்கள்.

இன்று தமிழக அணி பரோடா அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில், முதலில் டாசில் வெற்றி பெற்ற பரோடா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து கொண்டது. ஆடுகளம் பந்துவீச்சிக்கு சாதகமாக இருந்தது.

இதன் காரணமாக தமிழக அணி 33.3 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழக அணிக்கு ஏழாவது வீரராக களம் இறங்கிய அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக 51 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் சேர்த்தார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் உடன் சேர்ந்து விளையாடிய ஷாருக்கான் 39 பந்துகளில் 31 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். தமிழக அணியில் ஆறு வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். நம்பிக்கை நட்சத்திரம் சாய் சுதர்சன் 15 ரன்கள் மற்றும் விஜய் சங்கர் 11 ரன்கள் எடுத்தார்கள்.

இதற்கு அடுத்து பந்து வீச்சுக்கு வந்த தமிழக அணி பரோடா அணிக்கு திருப்பி பதிலடி கொடுத்தது. அத்தோடு 23.2 ஓவரில் 124 ரன்களுக்கு சுருட்டி, தமிழக அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

தமிழக அணியின் சார்பில் டி நடராஜன் 7 ஓவர்கள் பந்துவீசி, 1 மெய்டன் செய்து, 38 ரன்கள் விட்டுத் தந்து, 4 விக்கெட் கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி மூன்று மற்றும் சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!