“31 வருட ஜிங்க்ஸ்.. உலககோப்பை தோல்விக்கு மருந்து போடனும்” – கேப்டன் ரோகித் பேச்சு!

0
328
Rohit

இந்திய அணி நாளை மிக சவாலான ஒரு டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்க நாட்டில் அந்த அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. 31 வருடங்களாக தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்கின்ற வரலாற்றை மாற்றும் கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா எனக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை துவங்குகிறது. முதல் இரண்டு நாட்களுக்கு மழை அச்சுறுத்தல் இருக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்கள் பொதுவாக நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு போட்டி ஐந்து நாட்கள் நடைபெற்றால் ஐந்து நாட்களுமே பேட்டிங் செய்வது சவாலான ஒன்று. மேலும் நாட்கள் செல்ல செல்ல பேட்டிங் செய்வது கடினமானது.

இன்று கிறிஸ்துமஸ் என்பதால் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் இருப்பார்கள். அதே சமயத்தில் இந்திய அணி வீரர்கள் மழையின் காரணமாக கடைசி பயிற்சி அமர்வை ரத்து செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். மேலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா போட்டிக்கு முன்பான சம்பிரதாய பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்டார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசும்பொழுது “தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களில் பவுன்ஸ் மற்றும் வேகப்பந்து பேச்சாளர்களுக்கு கிடைக்கும் லேட்டரர் மூவ்மெண்ட் காரணமாக இங்கு பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள். மேலும் போட்டித் தொடர்ந்து நடக்கும் பொழுது ஆடுகளத்தில் விரிசல்கள் ஏற்படும். இதனால் பேட்டிங் செய்வது கடினமாகும்.

- Advertisement -

நீங்கள் ஐந்து நாட்கள் முழுவதிலும் ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கு மாறாத பவுன்ஸ் இருப்பதை பார்க்கலாம். ஐந்து நாட்களில் ஒரு குறிப்பிட்ட நாள் பேட்டிங் செய்ய சிறந்தது என்று எதையும் கூற முடியாது. ஏனென்றால் இங்கு ஒவ்வொரு நாளும் பேட்டிங் செய்வது சவாலான விஷயம். நாங்கள் இங்கு ஏற்கனவே விளையாடிய பொழுது உணர்ந்திருக்கிறோம்.

இங்கு தொடர்ந்து ஆட்டம் நடைபெறும் பொழுது சவால்கள் கடினமாகிக் கொண்டே செல்லும். இது ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் விரும்பும் சவால் ஆகும். நாங்கள் எப்படி விளையாட வேண்டும் என்று திட்டமிட்டு, விவாதித்து இருக்கிறோம். இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராக எங்களுக்கு நல்ல நேரம் இருந்தது. இப்போது ஒவ்வொரு தனி நபர்களும் சென்று அணிக்காக விளையாட வேண்டும்.

நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் இதுவரை டெஸ்ட் தொடர் வென்றது கிடையாது. நாங்கள் இப்பொழுது இங்கு தொடரை வென்றால் அது பெரிய விஷயமாக இருக்கும். இது உலகக்கோப்பை தோல்வியின் வலியை போக்குமா? என்று தெரியாது ஆனால் சிறப்பான ஒன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்!