கடைசி 1 ரன்னில் 3 விக்கெட்.. இலங்கையின் சாதனைக்கு முற்றுப்புள்ளி.. பாக்-க்கு உதவிய இந்தியா.. ஆசிய கோப்பை புள்ளி பட்டியல்.!

0
44832
ICT

ஆசியக்கோப்பையில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் அணியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று இருக்கிறது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தார். இந்திய அணியில் சர்துல் வெளியேற அக்சர் உள்ளே வந்தார்.

- Advertisement -

இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் நல்ல துவக்கம் தந்தார்கள். இந்திய அணி 11.1 ஓவரில் 80 ரன்கள் எடுத்திருந்தபோது, கில் 19 ரன்களில், இளம் இடது கை சுழற் பந்துவீச்சாளர் வெல்லாலகே பந்தில் போல்ட் ஆகி ஆட்டம் இழந்தார்.

வெல்லாலகே தொடர்ந்து விராட் கோலி 3, ரோஹித் சர்மா 53, கேஎல்.ராகுல் 39, ஹர்திக் பாண்டியா 5 ரன் என வெளியேற்றி 40 ரன்களுக்கு ஐந்து விக்கெட் வீழ்த்தினார். இதனால் இந்திய அணி பெரிய நெருக்கடியில் சிக்கியது.

இந்த நிலையில் பகுதி நேர பந்துவீச்சாளராக வந்த அசலங்கா, இஷான் கிஷான் 33, ரவீந்திர ஜடேஜா 4, ஜஸ்ப்ரீத் பும்ரா 5, குல்தீப் யாதவ் 0 என வெளியேற்றி அவர் பங்குக்கு நான்கு விக்கெட் வீழ்த்தினார். ஆட்டத்தின் இறுதி ஓவரில் தீக்சனா அக்சர் படேலை 26 ரன்களுக்கு வெளியேற்றினார். 49.1 ஓவரில் இந்திய அணி 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணியின் பதும் நிஷாங்க மற்றும் குசால் மெண்டிஸ் இருவரையும் துவக்கத்திலேயே பும்ரா வெளியேற்றினார். சிராஜ் திமுத் கருணரத்னையை வெளியேற்றினார். பவர்பிளேவில் இலங்கை மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

இதற்கு அடுத்து சதிரா 17, அசலங்கா 22 ஆகியோர் விக்கெட்டை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். இதற்கு அடுத்து வந்த கேப்டன் சனகா (9) விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார். இலங்கை அணி 99 ரன்களுக்கு ஆறு விக்கெட் இழந்திருக்க, இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

இந்த நிலையில் அனுபவ வீரர் தனஞ்செய டி சில்ல் வா உடன் இளம் வீரர் வெல்லாலகே ஜோடி சேர்ந்து அருமையான பாட்னர்ஷிப் அமைத்து பயமுறுத்தினார்கள். ரவீந்திர ஜடேஜா தனஜெய டி சில்வாவை 41 ரன்களில் வெளியேற்ற, இந்தியா பக்கம் ஆட்டம் திரும்பியது. இந்த ஜோடி 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதற்கு அடுத்து வந்த தீக்சனாவை 2 ரன்களில் ஹர்திக் பாண்டியா வெளியேற்ற, ரஜிதா மற்றும் பதிரனா இருவரையும் மூன்று பந்துகளில் குல்தீப் யாதவ் வெளியேற்ற, இலங்கை அணி 41.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 43 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். பும்ரா மற்றும் ஜடேஜா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றியின் மூலம் நல்ல ரன்ரேட் இருக்கின்ற காரணத்தினால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்திய அணி தனது கடைசி போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 15 ஆம் தேதி விளையாடுகிறது.

நாளை மறுநாள் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெல்லும் அணி இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும். இந்திய அணி இந்த போட்டியில் தோற்று இருந்தால் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு ஏறக்குறைய தகுதி பெற்று இருக்கும்.

அதே சமயத்தில் இந்திய அணி பங்களாதேசை வீழ்த்தினால் இறுதிப் போட்டிக்கு வந்துவிடும். பாகிஸ்தான் அணியின் இறுதிப்போட்டிக்கு வாய்ப்பு ஏறக்குறைய பறிபோய் இருக்கும். தற்பொழுது பாகிஸ்தானுக்கு இந்தியா உதவியிருக்கிறது. மேலும் தொடர்ந்து 13 போட்டிகளில் வென்றிருந்த இலங்கை அணியின் வெற்றி பயணத்திற்கு இந்தியா முற்று புள்ளி வைத்திருக்கிறது!