ஐபிஎல் 2024.. ஏற்கனவே தொடரிலிருந்து விலகியுள்ள 3 வீரர்கள்.. அணிகளுக்கு பின்னடைவு

0
5077

17 வது இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் 22ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்த லீத் தொடரை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.

ஐபிஎல் அட்டவணை பொதுவாக பிப்ரவரி மாதமே அறிவிக்கப்பட்டு விடும். ஆனால் இந்த முறை இந்தியாவில் நடைபெறும் பொதுத் தேர்தலின் காரணமாக அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முதல் 15 நாட்களுக்கான அட்டவணையை மட்டுமே தாமதமாக பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

- Advertisement -

தேர்தல் நடைபெறும் நாள் மற்றும் போட்டி நடைபெறும் நாள் ஆகிய இரண்டும் ஒத்துப் போகாத வகையில் அட்டவணையை அமைக்க பிசிசிஐ தீர்மானித்துள்ளது. இந்நிலையில் கிரிக்கெட்டின் முன்னணி நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் உலகக் கோப்பைக்குத் தயாராகும் வகையில் தங்களது பெயர்களை ஐபிஎல்லில் இணைத்துள்ளனர்.

எதிர்பாராத விதமாக மூன்று முன்னணி வீரர்கள் தற்போது ஐபிஎல்லில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பணிச்சுமை மற்றும் காயங்கள் காரணமாக அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மூன்று வீரர்களைப் பற்றிக் காண்போம்.

1.மார்க் வுட்

- Advertisement -

இவர் ஐபிஎல்லில் கடந்த மூன்று வருடங்களாக லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த அதிவேகப் பந்துவீச்சாளரான இவரை லக்னோ அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் சமீப காலமாக காயங்கள் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக குறைவான போட்டிகளிலேயே விளையாடி வந்துள்ளார்.

இந்நிலையில் உலகக் கோப்பைக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் இவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது பணிச்சுமையை குறைக்க தற்போது ஐபிஎல்லில் இருந்து வெளியேற்றியுள்ளது. இது லக்னோ அணிக்குப் பின்னடைவாகவே பார்க்கப்பட்டாலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கலக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த சமர் ஜோசப்பை மூன்று கோடிக்கு லக்னோ அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

2.கஸ் அட்கின்சன்

இங்கிலாந்து அணியைச் சேர்ந்த கஸ் அட்கின்சனை புதிய ஒப்பந்தமாக கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் 2024 இல் விளையாட மாட்டார் என்பதை கொல்கத்தா அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது அவருக்கு மாற்று வீரராக இலங்கை அணியைச் சேர்ந்த துஷ்மந்த சமீரா கொல்கத்தா அணியில் இணைந்துள்ளார். இவர் முன்னதாக லக்னோ மற்றும் பெங்களூர் அணிக்காக விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் ஓய்வு.. 2024 ரஞ்சி டிராபியில் பிரியா விடை

3.முகமது சமி

இந்தியாவின் அனுபவ முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் போது காயமடைந்தார். ஆனால் காயத்தை பொருட்படுத்தாது தொடர் முழுவதும் விளையாடி அணிக்கு சிறப்பாக பங்களிப்பை அளித்தார். இந்நிலையில் உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக ஐபிஎல்லில் இருந்து தற்போது விலகியுள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் வாரியமும் உறுதிப்படுத்தியுள்ளது.