இந்திய கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் ஓய்வு.. 2024 ரஞ்சி டிராபியில் பிரியா விடை

0
507

இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நடப்பு ரஞ்சி டிராபி சீசனோடு இந்திய அணி வீரர்கள் 5 பேர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடை பெற உள்ளனர். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

1.மனோஜ் திவாரி

- Advertisement -

உள்நாட்டு கிரிக்கெட்டின் முக்கிய வீரர்களில் ஒருவரான வங்காளத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி, பீகாரருக்கு எதிரான போட்டியில் தனது அணியை வெற்றி பெற வைத்ததன் மூலம் தனது ஓய்வினை அறிவித்து இருக்கிறார். 19 ஆண்டுகளுக்கு மேலாக தனது மாநிலத்திற்காக விளையாடி வரும் திவாரி கடந்த ரஞ்சி டிராபி சீசனில் பெங்கால் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார்.

38 வயதான இவர் முதல் தர போட்டியில் 10000க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். ஒரு கேப்டனாக அணிக்குத் தன்னால் முடிந்ததை சிறப்பாக வழங்கியுள்ளார். வங்காள அணியை வழி நடத்தியதில் இவரின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.

2.சௌரப் திவாரி

- Advertisement -

இடது கை ஆட்டக்காரர் ஆன இவர், 2006-2007 ரஞ்சி டிராபியில் இளம் வயதிலேயே அறிமுகமானார். 17 வருடங்களில் ஜார்கண்ட் அணியின் கேப்டன் ஆன சௌரப் திவாரி 115 முதல் தர போட்டிகளில் விளையாடி 189 இன்னிங்ஸ்களில் 47.51 என சராசரி வைத்து 22 சதங்கள் மற்றும் 34 அரை சதங்கள் என 8030 ரன்கள் குவித்துள்ளார்.

“உங்களால் இந்திய அணி அல்லது ஐபிஎல் அணியில் விளையாட முடியாவிட்டால் இது இளைஞர்களுக்கு வழி விட சரியான நேரம் ஆனதாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று சௌரப் திவாரி கூறியிருக்கிறார்.

3.வருண் ஆரோண்

இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளர்களில் ஒருவரான வருண் ஆரோன் ஐபிஎல்இல் பெங்களூர் அணிக்காக விளையாடியவர். பின்னர் காயம் காரணமாக அவரால் நிலையான பந்துவீச்சினை வெளிப்படுத்த முடியவில்லை. 2010- 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபியில் மணிக்கு 153 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இவர் 66 ஆட்டங்களில் விளையாடி 173 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“எனது குடும்பத்தின் முன்னிலையில் நான் எனது கடைசி ஆட்டத்தினை விளையாடுவது மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது” என்று ஓய்வினை அறிவிக்கும் முன்பு வருண் ஆரோன் வெளிப்படுத்தியுள்ளார்.

4.ஃபைஸ் ஃபசல்

விதர்பாவை சேர்ந்த ஃபைஸ் ஃபசல் 2018 ஆம் ஆண்டு விதர்பா அணி ரஞ்சிக்கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியவர். அந்த சீசனில் அவர் அதிக ரன்கள் எடுத்தவரின் பட்டியலில் முன்னணியில் இருந்தார்.
2003 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜம்மு மற்றும் காஷ்மீர் அணிக்கு எதிரான ஃபிலைட் குரூப் போட்டியில் தனது அறிமுக ஆட்டத்திலேயே 151 ரன்கள் விளாசி அனைவரையும் வியப்புக்குள்ளாக்கினார். இவர் முதல் தர போட்டிகளில் 983 ரன்கள் விளாசியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது 38 வயதாகும் இவர், 2016 ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

5.தவால் குல்கர்னி

மும்பை அணியின் அனுபவ வீரரான தவால் குல்கர்னி தனது 17 ஆண்டு கால உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் மூன்று முறை ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்விங் பந்துவீச்சில் வல்லவரான குல்கர்னி ஐபிஎல்லில் மும்பை அணிக்காக அவ்வப்போது விளையாடுவார்.

35 வயதான இவர் 95 முதல் தர போட்டிகளில் விளையாடி 251 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.