ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடியும் கூட இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காத 3 பிரபல வீரர்கள்

0
90
Wriddhiman Saha and Mayank Agarwal

கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட் என்பதிலிருந்து ஒருநாள் போட்டியாகப் பரிணமித்துப் பின் ஒருநாள் போட்டிகளே கிரிக்கெட்டில் பிரதான வடிவமாக மாறியதுபோல், தற்போது ஒருநாள் போட்டியிலிருந்து கிரிக்கெட் இருபது ஓவர் வடிவமெடுத்து பெரிய அளவில் வணிக ரீதீயாக வெற்றி அடைந்திருக்கிறது.

மேலும் உலக கிரிக்கெட் நாடுகள் உரிமையாளர்களின் டி20 தொடர்களை நடத்திக் கொள்ளவும் ஐ.சி.சி அனுமதித்து இருக்கிறது. இங்கிலாந்தில் இதே நூறு பந்து போட்டியாகவும் நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இன்டீஸ், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, செளத்ஆப்பிரிக்கா என முக்கிய கிரிக்கெட் நாடுகள் உரிமையாளர்களின் டி20 போட்டி தொடர்களை நடத்துகிறது.

- Advertisement -

இதில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர்தான் உலகின் நம்பர் 1 தொடராக இரசிகர்கள் அளவிலும் வணிக ரீதியாகவும் இருக்கிறது. இந்த தொடருக்காக உலக கிரிக்கெட் நாடுகள் தங்களின் ஆண்டு அட்டவணைகளையே திருத்தி அமைத்துக் கொள்கின்றன.

இப்படியான உலகின் நம்பர் 1 டி20 தொடரில் வெற்றிக்கரமாக விளங்கியும், இந்திய டி20 அணியில் இதுவரை நுழைய முடியாத மூன்று வீரர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம். மூன்று வீரர்களுமே தங்களுக்கென தனித்திறனும் சாதனைகளையும் கொண்டிருப்பவர்களே!

விருதிமான் சஹா

ஐ.பி.எல் இறுதிபோட்டியில் முதல் சதமடித்த வீரர் என்ற பெருமைக்குரியவர். இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக அறியப்பட்டவர். இந்த ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்தில் 1.9 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டவர் 11 போட்டிகளில் 317 ரன்களை அடித்து, ஓபனிங் ஸ்லாட்டின் குறையைத் தீர்த்து, குஜராத் அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.

- Advertisement -
சுப்மன் கில்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை இந்த ஆண்டு புதுஅணியான குஜராத் டைட்டன்ஸ் ஏலத்திற்கு முன்பாகவே 8 கோடிக்குத் தக்கவைத்தது. இந்தத் தொடரில் 16 போட்டிகளில் 483 ரன்களை குவித்து குஜராத் கோப்பையை வெல்ல உதவியதோடு, தனது குறையாக விமர்சிக்கப்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டையும் உயர்த்தி இருக்கிறார். இளம் வீரர் என்பதால் எதிர்காலத்தில் இந்திய டி20 அணியில் இவருக்கான இடம் கிடைக்கலாம்.

மயங்க் அகர்வால்

இந்த ஆண்டு 12 கோடிக்குப் பஞ்சாப் அணியால் தக்க வைக்கப்பட்டு கேப்டனும் ஆக்கப்பட்ட இவர் அதிரடியாக ஆடக்கூடிய துவக்க ஆட்டக்காரர் ஆவார். இந்திய டி20 அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததுதான் ஆச்சரியமான விசயமே. எதிர்காலத்திலும் கூட இந்திய டி20 அணியில் இவருக்கான வாய்ப்பு என்பது சந்தேகம்தான். ஏனென்றால் வெள்ளைப்பந்தில், ஐ.பி.எல் தொடரில் சிறந்த பார்மில் இருக்கும் ஷிகர் தவானுக்கே வாய்ப்பு இல்லாததோடு, இளம்வீரர்களான இஷான் கிஷன், ருதுராஜ் போன்றவர்களை உருவாக்கத்தான் பி.சி.சி.ஐ விரும்புகிறது!

- Advertisement -