ஐபிஎல் தொடரின் சீக்ரெட் ஏலத்தில் வாங்கப்பட்ட நட்சத்திர வீரர்கள்

0
1211
Ravindra Jadeja and Kieron Pollard

ஐ.பி.எல் போட்டிகளின் சுவாரசியங்களுக்கும், பரபரப்புக்கும், திருப்பங்களுக்கும் சற்றும் குறைவில்லாதது ஐ.பி.எல்-ன் மெகா ஏலம்.

இன்னும் சொல்லப்போனால் ஐ.பி.எல் மெகா ஏலம் போட்டிகளை விட தீவிர சுவாரசியமானது. ஒரு அணியின் வெற்றி 51% உறுதி ஆவது போட்டிகளில் அல்ல ஏலத்தில்தான்.

- Advertisement -

இப்படிப்பட்ட ஐ.பி.எல் ஏலத்தில் சில விதிமுறைகள் இருக்கிறது. முன்பு நாம் தக்க வைக்காது விட்ட நம் வீரர் ஒருவரை மட்டும், ஏலத்தில் மற்றவர்கள் வாங்க வரும் பொழுது, அதே விலைக்கு நாம் வாங்கிக்கொள்ளலாம். இதற்கு ஆர்.டி.எம் என்று பெயர்.

அதேபோல் ஏலத்தின் கடைசியில், ஏலம் போகாமல் இருக்கும் வீரர்களில் யாராவது தேவைப்பட்டால், அவரது பெயரைச் சீட்டில் எழுதி தரலாம் எல்லா அணிகளும். ஒரே வீரரின் பெயரை ஒன்றிரண்டு அணிகள் விரும்பியிருந்தால், அந்த வீரருக்காக அந்த அணிகளுக்குள் மட்டும் ஏலம் நடக்கும் இதுவொரு முறை. இது எதற்காக என்றால், நூற்றுக்கணக்கில் மீதமிருக்கும் வீரர்களின் பெயர்களை அறிவித்து ஏலம் விடுவது நேர விரயம் என்பதற்காக!

இதேபோல்தான் ஐ.பி.எல்-ன் ஏலத்தில் சுவாரசியமான ஏலமுறை ஒன்று உள்ளது. அதன் பெயர்தான் சீக்ரெட் பிட்டிங்.

- Advertisement -

அதாவது ஒரு அணியின் கையில் இரண்டு கோடி இருக்கிறதென்றால், ஒரு வீரருக்காக அவர்கள் ஏலம் கூறும்போது, ஏலம் இரண்டு கோடியைத் தாண்டிவிட்டால், கையில் இரண்டு கோடிகளுக்கு மேல் இல்லாத அந்த அணியை அந்த வீரருக்கான ஏலத்திலிருந்து விலக்கமாட்டார்கள். மாறாக அந்தக் குறிப்பிட்ட வீரருக்கான ஏலத்தில் பங்குப்பெற்ற அணிகளை, அந்த வீரருக்கு எவ்வளவு கொடுத்து வாங்க விருப்பமென்று இரகசியமாக சீட்டில் எழுதித்தர சொல்வார்கள். இப்படித் தரும் அணிகளில் யார் அதிகத் தொகையைக் குறிப்பிட்டார்களோ, அவர்களுக்கு அந்த வீரர் கிடைப்பார். ஆனால் ஏலம் நடந்த தொகை வரைக்கும்தான் அந்த வீரருக்குக் கிடைக்கும். மீதி அதிகப்படியான தொகை பி.சி.சி.ஐ க்கு போய்விடும். அதேபோல் ஏலம் கூறிய தொகைவரைதான் அணியின் மொத்தத் தொகையிலும் கழிக்கப்படும்!

இந்த சீக்ரெட் பிட்டிங் முறையில் வாங்கப்பட்ட மூன்று பிரபலமான வீரர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்!

நியூசிலாந்தின் ஷேன் பாண்ட்

2010-ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் ஷேன் பாண்ட்க்காக மல்லுக்கட்ட, இறுதியாக இரகசிய ஏலத்தில் 750,000 டாலர்களுக்கு கொல்கத்தா வென்றது.

வெஸ்ட் இன்டீசின் கீரன் பொலார்ட்

அதே 2010-ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் பெங்களூர், சென்னை, மும்பை அணிகள் பொலார்ட்காக போராட, இறுதியில் இரகசிய ஏலத்தில் 750,000 டாலருக்கு தூக்கியது மும்பை. இது மட்டும் மாறியிருந்தால் ஐ.பி.எல் வரலாற்றில் பல போட்டி முடிவுகள் மாறியிருக்கும். சென்னை பொலார்ட்டை தட்டியிருந்தால் பிராவோ கிடையாது. இந்த வகையில் சென்னை அணி நிர்வாகமும், இரசிகர்களும் சந்தோசம்தான் படுவார்கள். இதில் இன்னொரு சுவாரசியமான விசயம் பிராவோ மும்பை அணிக்கு விளையாடிவிட்டுத்தான் சென்னைக்கு வந்தார்!

ரவிந்தீர ஜடேஜா

2012 ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தில் சென்னை அணியும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் ஜட்டுக்காக மோதிக்கொள்ள இரகசிய ஏலம் வருகிறது. அப்பொழுது சென்னை அணி 2 மில்லியன் டாலரை எழுதி அனுப்ப, ஜட்டு சென்னைக்கு வருகிறார். இன்று அவர்தான் தோனிக்கு அடுத்து சென்னை அணியை வழிநடத்த போகிறார்.

இந்த இரகசிய ஏலத்தில் பெரிய பயனடைந்தது மும்பையும் சென்னையும்தான். இதில் மும்பை வாங்கிப் பயனடைந்தது. சென்னை வாங்காமலும், வாங்கியும் பயனடைந்திருக்கிறது!