இலங்கை பிரீமியர் லீகில் கலந்து கொள்ளவுள்ள 3 நட்சத்திர சி.எஸ்.கே வீரர்கள்

0
476
Maheesh Theekshana LPL

கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஓவர்கள் மட்டும் விறுவிறுப்பான ஃபார்மட்டான டி20ஐக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சர்வதேச டி20 போட்டிகளை விட உள்ளூர் டி20 லீக்கலுக்கு மவுசு அதிகம். முக்கியமாக உலகிலேயே மிகப் பெரிய டி20 தொடர் என்றால் அது ஐபிஎல் தான். அதற்குப் பின் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிபிஎல், வெஸ்ட் இண்டீஸ் நடத்தும் கரீபியன் லீக், பாகிஸ்தான் பிரீமியர் லீக் என பல தொடர்கள் உள்ளன.

இதே போல் இலங்கை நாட்டிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு லங்கா பிரீமியர் லீக் என்று பெயர். அங்கு நடக்கும் போட்டிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பாப் டு பிளசிஸ், இர்பான் பதான், முனாப் பட்டேல் போன்ற நட்சத்திர வீரர்களும் அந்தத் தொடரில் களமிறங்குகின்றனர். சென்ற ஆண்டு சென்னை அணி எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. இருப்பினும் புதியதாக திறமை நிறந்த ஒரு சில வீரர்கள் கிடைத்துள்ளனர். 2022 லங்கா பிரீமியர் லீகில் இடம்பெற்றிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

- Advertisement -
மகேஷ் தீக்சனா

நடப்பு சாம்பியன்களான ஜப்னா கிங்ஸ் மூன்றாவது சீசனுக்கு மகேஷ் தீக்சனாவை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். மாயாஜால ஸ்பின்னரான இவர் சென்னை அணிக்காக முக்கிய கட்டத்தில் தேவையான விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்துள்ளார். இவரது விக்கெட் வேட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக தொடங்கியது. அந்தப் போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார். தொடர் முடிவில் 9 போட்டிகளில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். மிக முக்கியமாக பவர்ப்பிளே ஓவர்களில் பந்துவீசக் கூடிய திறன் கொண்டவர் இவர்.

டுவெய்ன் பிரிட்டோரியஸ்

தென்னாபிரிக்க ஆல்ரவுண்டர் டுவெய்ன் பிரிட்டோரியஸை கொழும்பு ஸ்டார்ஸ் அணி 60,000 அமெரிக்கா டாலர்களுக்கு வாங்கியுள்ளது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேலிடத்திற்கு முன்னேறினார். சென்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி இவரை வாங்கியது மிகப் பெரிய லாபம் தான். பிராவோ இல்லாத பட்சத்தில் இவர் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் செயல்படுகிறார். பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடி இமாலய சிக்ஸர்கள் விளாசுவார். சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – தென்னாபிரிக்கா டி20ஐ தொடரில் கூட சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதீஷா பதிரானா

மூன்றாம் ஆண்டு தொடருக்கு கேண்டி ஃபால்கன்ஸ் அணி மதீஷா பதிரானா ஒப்பந்தம் செய்துள்ளது. செல்லமாக ஜூனியர் மலிங்கா என்றழைக்கப்படும் இவர் ஐபிலிலில் தன் அறிமுகப் போட்டியிலேயே கேட்டேன் தோனியிடம் பாராட்டுகளை சம்பாரித்துவிட்டார். உலகின் பயங்கரமான பவுலிங் ஆக்ஷனில் மலிங்காவும் ஒருவர். அச்சு அசல் அவரைப் போலவே பந்துவீசும் இளம் வீரராக வருங்காலத்தில் நட்சத்திர வீரர்களுக்கு நிச்சயம் பெரிய அச்சுறுத்தலாக இருப்பாக இருப்பார். ஏற்கனவே தன் முதல் ஐபிஎல் போட்டியில் ஷுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்டி‍யாவின் விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

- Advertisement -