2வது ஓடிஐ.. 29 வருட எட்ட முடியாத சச்சின் சாதனையை உடைத்து இசான் கிஷான் அசத்தல் பேட்டிங்!

0
4301
Ishaan

இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தயாரிப்புக்கு மிக முக்கியமான ஒருநாள் தொடரான, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், தற்போது இந்திய அணி விளையாடுகிறது.

இந்தத் தொடரில் நேற்றுக்கு முன்தினம் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்த நிலையில், இன்று இரண்டாவது போட்டி பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடந்து வருகிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் பரிசோதனை செய்யப்பட வேண்டிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தினால், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் அணியில் சேர்க்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது, இந்திய அணியின் பரிசோதனை முயற்சிக்கு நல்ல விஷயமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இந்திய அணிக்கு இந்த ஆட்டத்திலும் இசான் கிஷான் மற்றும் கில் துவக்க ஆட்டக்காரர்களாக களம் வந்தார்கள்.

மிகச் சரியாகவும் அதே நேரத்தில் பொறுமையாகவும் இன்னிங்ஸை தொடங்கி விளையாடிய இந்த ஜோடி 50 ரன்களை முதல் விக்கெட்டுக்கு வெற்றிகரமாக கடந்தது. கடந்த போட்டியின் ஆடுகளம் போலவே, இந்த போட்டி ஆடுகளத்திலும் பந்துவீச்சுக்கான சாதகமான சூழ்நிலையை காணப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் மிகச் சிறப்பாக தொடர்ந்து செயல்பட்ட இஷான் கிஷான் கொஞ்சம் கொஞ்சமாக அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டு, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கடைசி டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகள் என தொடர்ந்து மூன்று அரை சதங்கள் அடித்தார்.

முதல் விக்கெட்டுக்கு சுப்மன் கில் 34 ரன்களில் ஆட்டம் இழக்க, அதற்கு அடுத்து சஞ்சு சாம்சன் 9, அக்சர் படேல் 1, ஹர்திக் பாண்டியா 7, இஷான் கிஷான் 55 ரன்கள் என தொடர்ந்து வெளியேறினார்கள். இதற்கடுத்து மழை குறுக்கிட்ட காரணத்தால் ஆட்டம் தடைபட்டு மீண்டும் துவங்கியிருக்கிறது.

இந்தப் போட்டியில் இஷான் கிஷான் அரைசதம் அடித்ததின் மூலம் இந்திய துவக்க ஆட்டக்காரராக 29 வருடங்களாக சச்சின் வசம் இருந்த ஒரு முக்கிய சாதனையை உடைத்திருக்கிறார். அதாவது முதல் ஐந்து இன்னிங்ஸில் இந்திய துவக்க ஆட்டக்காரராக அதிக ரன்கள் அடித்த பட்டியலில் சச்சினை விஞ்சி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

துவக்க ஆட்டக்காரராக ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் ஐந்து இன்னிங்ஸில் அதிக ரன் அடித்த இந்திய வீரர்கள் :

இஷான் கிஷான் – 348
சச்சின் டெண்டுல்கர் – 321
சுப்மன் கில் – 320
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் – 261