25 பிளேயர்ஸ் காயம்.. உலக கோப்பைக்கு முன்பாக நடந்த துரதிஷ்டம்.. முழு விவரம் இதோ.!

0
2381

2023 ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வரை இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது. இன்னும் உலகக்கோப்பை போட்டிகளுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் உலக கோப்பையில் விளையாடும் அணிகள் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

மேலும் அறிவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் இருந்து வீரர்களை மாற்றுவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 27 என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்திருக்கிறது.. எந்த ஒரு அணியும் தங்கள் முதலில் அறிவித்த பதினைந்து பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் செப்டம்பர் 28ஆம் தேதிக்குள் அந்த வீரரை நீக்கி விட்டு அவருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை சேர்த்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக அணியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் இந்த வீரர்கள் உலகக்கோப்பை அணியிலும் இடம் பெற்றிருப்பதால் அவர்கள் உலகக் கோப்பையில் பங்கேற்பார்களா என்ற கேள்விக்குறியும் எழுந்திருக்கிறது. இது அந்த கிரிக்கெட் அணிகளுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறலாம்.

சமீபத்தில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல் கையில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் ஹாம்ஸ்ட்ரிங் தசை நார்களில் ஏற்பட்ட காயம் காரணமாகவும் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். மேலும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணியின் முன்னணி பந்துவீச்சாளர் டிம் சவுதி கைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அந்தப் போட்டியில் பாதியிலிருந்தே விலகினார். மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இந்த காயத்தால் அவர் உலக கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதே போல் தான் நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான டேரில் மிச்சல் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒரு நாள் போட்டியின் போது மோதிர விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த போட்டியில் இருந்து விலகினார். மேலும் இந்த காயம் அவரை உலக கோப்பை அணியில் இருந்து நீக்குமா என்ற சந்தேகம் வலுத்திருக்கிறது.

- Advertisement -

மேலும் இலங்கையில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக வேண்டி இருந்தது . இவர் சமீபத்தில் தான் முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து மீண்டும் அணியில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதே போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹாரிஸ் ரவூப் மற்றும் நசிம் ஷா இருவரும் காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் இருந்து பாதியிலேயே விலக வேண்டிய நிலை ஏற்பட்டது . இருவரும் பேட்டிங் செய்யவும் வரவில்லை. மேலும் காயத்தின் தீவிரத் தன்மை உணர்ந்து ஆசியக் கோப்பை போட்டியிலிருந்தும் விலகினர். தற்போதைய இவர்களின் உலகக் கோப்பை பங்கேற்பு குறித்து ரசிகர்கள் கவலை அடைந்து இருக்கின்றனர்.

உலகக் கோப்பைக்கு முன்பாக காயமடைந்திருக்கும் வீரர்களின் பட்டியல்:

இந்தியா:
அக்சர் படேல்
ஷ்ரேயாஸ் ஐயர்

பாகிஸ்தான்:
நசீம் ஷா
இமாம் உல் ஹக்
ஹரிஸ் ரவுஃப்

ஆஸ்திரேலியா:
டிராவிஸ் ஹெட்
பாட் கம்மின்ஸ்
ஸ்டீவ் ஸ்மித்
மிட்செல் ஸ்டார்க்
கிளென் மேக்ஸ்வெல்:
ஆஷ்டன் அகர்

இலங்கை:
மகேஷ் தீக்ஷனா
துஷ்மந்த சமீர
தில்ஷன் மதுஷங்க
வனிந்து ஹசரங்க

தென்னாப்பிரிக்கா:
அன்ரிச் நார்ட்ஜே
சிசண்டா மாகலா
டெம்பா பவுமா

நியூசிலாந்து:
டிம் சவுதி
டார்லி மிட்செல

இங்கிலாந்து:
அடில் ரஷீத்
மார்க் வூட்

பங்களாதேஷ் :
தமீம் இக்பால்
நஜ்முல் ஹொசைன் சாண்டோ