ஒரே நாளில் 23 விக்கெட்.. இது ஆடுகளமா?.. நீங்க பேட்ஸ்மேன்களா?.. இந்திய முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

0
468
ICT

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதி வரும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்பொழுது கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு மிகக் கடினமான ஒன்றாக இருந்தது. பவுன்ஸ் எதிர்பார்க்காத அளவிற்கு இருந்ததால், மைதானத்தில் பந்துவீச்சாளர்களின் கொடி பறந்தது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸ் துவங்கிய தென் ஆப்பிரிக்க அணியை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் வெறும் 55 ரன்களுக்கு சுருட்டி அசத்தினார்கள். இந்திய பந்துவீச்சு தரப்பில் முகமது சிராஜ் 6, பும்ரா மற்றும் முகேஷ் குமார் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. ஐந்தாவது விக்கட்டாக கேஎல் ராகுல் ஆட்டம் இழக்க, அங்கிருந்து மேற்கொண்டு ஒரு ரன் கூட எடுக்காமல் 153 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. ஒரு ரன் கூட இருக்காமல் இந்திய அணி அந்த இடத்தில் ஆறு விக்கெட் இழந்தது அதிர்ச்சியாக அமைந்தது.

முதலாவது நாளிலேயே தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸை அதாவது ஆட்டத்தின் மூன்றாவது இன்னிங்ஸை விளையாட வந்தது. அதிலும் தென் ஆப்பிரிக்க அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது. இன்று இரண்டாவது நாள் போட்டி நடைபெற இருக்கிறது. மொத்தமாக சேர்த்து இரண்டாவது நாள் ஆட்டத்திலேயே 17 விக்கெட்தான் ஆட்டத்துக்குள் இருக்கிறது என்பது சர்ச்சையான விஷயமாக மாறி இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “இந்த ஆடுகளத்தில் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. மேலும் அனுபவமற்ற பேட்ஸ்மேன்கள் போல விளையாடியதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. ஏனென்றால் மூன்று வடிவத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மூன்றாவதாகத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆடுகளத்தில் கொஞ்சம் உயிர் இருந்தால் இப்படித்தான் நடக்கும். கேப்வுனில் பந்துவீச்சாளர்கள் ராஜாக்கள் போல இருந்தார்கள்.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட். சிராஜ் நன்றாக பந்து வீசினார் அவருக்கு முகேஷ் குமார் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடாவும் நன்றாக இருந்தார். இரண்டு தரப்பிலுமே பெரிய சரிவுகள் இருந்தது. இதேபோல் இரண்டு தரப்பிலும் நான்கு பந்துவீச்சாளர்கள் சிறப்பாக இருந்ததை நீங்கள் பார்த்திருக்க முடியும்!” என்று கூறியிருக்கிறார்!