ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்.. பேட்ஸ்மேன்களை திணறடித்த ஆடுகளம்.. பரபரப்பான கட்டத்தில் இந்தியா தென்னாப்பிரிக்கா டெஸ்ட்

0
1856

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் விழுந்து இருப்பது ரசிகர்களை வியப்பு அடைய செய்திருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

இந்த நிலையில் நெருக்கடியான கட்டத்தில் இந்திய அணி டாசை  இழந்தது. இதை அடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி தொடக்க வீரர்கள் ஏய்டன்  மார்க்கரம் மற்றும் கேப்டன் டீன் எல்கார் ஆகியோர் ஒற்றை இலக்கம் ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் தன்னுடைய அபாரமான பந்து வீச்சால் எதிரணிகளுக்கு தூங்கா இரவை பரிசளித்தார். சிராஜ் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர்களின் பேட்டிங் வரிசை முருங்கை மரம் போல் உடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த டேவிட் பெட்டிங்கம் மற்றும் மார்க்கோ ஜான்சன் ஆகியோர் ஒரே ஓவரில் சிராஜின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர்.

தென்னாப்பிரிக்கா அணி 23.2 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 55 ரன்கள் ஆட்டம் இழந்தது. இது தென்னாபிரிக்க  மண்ணில் கடந்த 125 ஆண்டுகளில் மிக குறைந்த ஸ்கோர் ஆகும். இதனை அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கியது. தென்னாப்பிரிக்காவை விட மிகப் பெரிய இலக்கை எடுத்தால் இன்னிங்ஸ் வெற்றியை இந்தியாவும் பெறும் என ரசிகர்கள் நம்பினர்.

ஆனால் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேறினார். எனினும் ரோஹித் சர்மா, கில்  பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களை சேர்த்தது. ரோகித் சர்மா 39 ரன்களில் வெளியேற கில் 36 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து நட்சத்திர வீரர் விராட் கோலி அபாரமாக விளையாடி 46 ரன்கள் சேர்த்தார்.

- Advertisement -

ஆனால் தேனீர் இடைவெளியின் போது கே எல் ராகுல் எட்டு ரன்னில் ஆட்டம் இழக்க அதன் பிறகு வந்த அனைத்து வீரர்களுமே டக்அவுட் ஆகி வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். குறிப்பாக 153 ரன்களில் நான்கு விக்கெட்டுகள் என்ற இருந்த இந்திய அணி கே எல் ராகுல் ஆட்டம் இழந்தவுடன் ஜீரோ ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகள் இழந்தது. இதில் ஆறு பேட்ஸ்மேன்கள் டக்கவுட்டாகி வெளியேறினர். இதன் மூலம் இந்தியா 153 ரன்கள் மட்டும் தான் எடுத்தது.

இதனை அடுத்து 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாபிரிக்க அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. இந்திய அணி வீரர்கள் மீண்டும் விக்கெட்டுகளை கைப்பற்ற கடும் முயற்சியில் எடுத்தனர். கேப்டன் டீன் எல்கர் 12 ரன்களிலும் டோனி டிசோர்சி 1 ரன்னிலும் ஸ்டெப்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில் முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் 17 ஓவரில் தென்னாபிரிக்க அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. ஏய்டன் மார்க்கரம் 36 ரன்களும் டேவிட் பெட்டிங்கம் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இது இந்திய அணியின் ஸ்கோரை விட 36 ரன்கள் குறைவாகும். ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் விழுந்து இருப்பது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.