2025ஆம் ஆண்டின் இந்திய வீரர், வீராங்கனைகளின் சிறந்த 5 செயல்பாடு? இர்பான் பதான் கணிப்பு

0
388

2025 ஆம் ஆண்டில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகளின் சிறந்த ஐந்து செயல்பாடுகளை முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் இர்பான் பதான், தேர்வு செய்துள்ளார்.  ஆடவர் அணிக்கு கலவையான சீசன் அமைந்த போதிலும், பதான் இங்கிலாந்துக்கு எதிரான  ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் ஷுப்மன் கில் செய்த சாதனையை, இந்த ஆண்டின் 5வது சிறந்த செயல்பாடாக தேர்ந்தெடுத்தார்.

இந்திய கேப்டனாக தனது முதல் டெஸ்ட் தொடரில், லீட்ஸில் நடந்த தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த போதிலும், கில் தலைமையிலான அணி இறுதி இன்னிங்ஸில் 370 ரன்களைத் தற்காத்து கொள்ள முடியாமல் தோல்வியை தழுவியது. இருப்பினும், இரண்டாவது டெஸ்டில் எட்ஜ்பாஸ்டனில் தனது பேட்டிங்கில் சிதறடித்தார்.

- Advertisement -

கில், கோல், ரோகித்தை தேர்ந்து எடுத்த பதான்:

கில் முதல் இன்னிங்ஸில் அபாரமான 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்களும் எடுத்து இந்தியாவை 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். தனது ஆண்டின் நான்காவது சிறந்த இந்திய செயல்திறனுக்கு, பதான் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளில் இருந்து தலா ஒன்றைத் தேர்வு செய்தார்.

ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில் நெருக்கடியான கட்டத்தில் 53 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்த திலக் வர்மாவையும், 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 134 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸையும் தேர்ந்தெடுத்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 339 ரன்களை விரட்டி அடித்து இந்தியாவை முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வெல்ல ரோட்ரிக்ஸ் பேட்டிங் வழிவகுத்தது. மூன்றாவது இடத்தில், பதான் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டன்சி மற்றும் ஒருநாள் பேட்டிங்கிற்காக ரோஹித் ஷர்மாவைத் தேர்ந்தெடுத்தார்.

இதில் சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் கேப்டன் ரோகித் அடித்த 76 ரன்கள் அடங்கும். சாம்பியன்ஸ் டிராபி பட்டத்திற்கு இந்திய அணியை ரோகித் தோல்வியின்றி வழிநடத்தினார். ஆஸ்திரேலியாவில் நடந்த சமீபத்திய ஒருநாள் தொடரின் கடைசி இரு போட்டிகளில் 73 மற்றும் 121 ரன்கள் எடுத்தார். இர்பான் பதானின் 2025 ஆம் ஆண்டின் சிறந்த செயல்பாட்டுக்கு 2வது இடத்தில்   விராட் கோலியை  தேர்ந்தெடுத்தார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய  ஒருநாள் தொடரில் விராட் கோலியின் தொடர்ச்சியாக 2  சதங்கள் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு மத்தியில்,   முதல் இரு ஒருநாள் போட்டிகளில் 120 பந்துகளில் 135 மற்றும் 93 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அசத்தினார்.

சிராஜ்ஜின் அபார பந்துவீச்சு:

இந்த தொடரை 302 ரன்கள்,சராசரி 151 உடன் முடித்து இந்தியாவை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற வைத்தார். இறுதியாக, பதான் இங்கிலாந்து தொடரை சமன்செய்த ஓவல் டெஸ்டின் இறுதி இன்னிங்ஸில் முகமது சிராஜின் ஐந்து விக்கெட் எடுத்ததை ஆண்டின் சிறந்த இந்திய செயல்பாடாக தேர்ந்தெடுத்தார்.

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. ஆஸ்திரேலிய அணி புள்ளிகள் சரிவு.. இங்கிலாந்து வெற்றி

1-2 என்ற கணக்கில் பின் தங்கியிருந்த ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா தோல்வியின் விளிம்பில் இருந்த போது இங்கிலாந்து 374 ரன்கள் இலக்கை விரட்டியது.301/3 என்ற நிலையில் இருந்தது. ஆனால், சிராஜ் கடைசி நான்கு விக்கெட்டுகளில் மூன்றை எடுக்க  இறுதி நாளில் இந்தியாவை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  போட்டியில் சிராஜ் ஒன்பது விக்கெட்டுகள் எடுக்க,இந்தியா 2-2 என்ற சமனுடன் தொடரை முடித்தது.

- Advertisement -