உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. ஆஸ்திரேலிய அணி புள்ளிகள் சரிவு.. இங்கிலாந்து வெற்றி

0
541

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்  சைக்கிளில் தனது முதல் தோல்வியை ஆஸ்திரேலிய அணி சந்தித்தது.  ஆஷஸ் பாக்ஸிங் டே டெஸ்டில்  மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை இங்கிலாந்து வீழ்த்தியது.  பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி 175 ரன்கள் இலக்கை 4 விக்கெட்டுகள் மீதமிருக்க விரட்டி அடித்து, டெஸ்டை இரண்டு நாட்களுக்குள் முடித்துது.

இதன் மூலம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்,  இங்கிலாந்து அணி தங்களது முதல் வெற்றியை பதிபு செய்தது.  முதல் நாளில் இரு அணிகளும் ஸ்டம்ப்ஸுக்கு முன் ஆல் அவுட் ஆகின.  2வது நாளில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு சுருண்டது. வெறும் மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டினர்.

- Advertisement -

WTC புள்ளி பட்டியல்:

இங்கிலாந்து ரன் சேஸில் ஆக்ரோஷமாக ஆடி, முதல் 10 ஓவர்களில் 70 ரன்களை அடித்தது. ஆஸ்திரேலியா சில விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பம் ஏற்படுத்த முயன்ற போதிலும், இங்கிலாந்து அணி தங்களது அணுகுமுறையை மாற்றி இறுதியாக இரண்டாவது நாளின் இறுதி செஷனில் வெற்றியைப் பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான மெல்போர்ன் தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் புள்ளி வெற்றி சதவீதத்தில் 85.71 ஆக குறைந்தது.  நான்காவது டெஸ்டுக்கு முன்பு, தொடரில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோற்ற பிறகு, இங்கிலாந்து WTC பட்டியலில் ஏழாவது இடத்தில் 27.08 சதவீதத்துடன் இருந்தது.2010-11க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வென்றது.

- Advertisement -

குறைந்த புள்ளிகள்:

தற்போது இங்கிலாந்து அணியின் புள்ளி சதவீதம் 35.19 ஆக உயர்ந்தது. ஆனால் அவர்கள் இந்தியாவுக்கு கீழே இன்னும் ஏழாவது இடத்திலேயே உள்ளனர். மறுபுறம், ஆஸ்திரேலியா அணியின் வெற்றி சதவீதத்தில் இருந்து 100 ஆக இருந்தது தற்போது குறைந்தது. சைக்கிளில் முதல் ஆறு போட்டிகளிலும் வென்றிருந்தனர்.

இதையும் படிங்க: ஜடேஜா பாய் பந்தை ஸ்டேடியத்திற்கு வெளியே அடிச்சேன்.. அப்ப ரோஹித் பாய் இதை சொன்னார் – ஜெய்ஸ்வால் பேட்டி

தோல்வி அவர்களின் வெற்றி சதவீதத்தை பாதித்த போதிலும், அவர்கள் இன்னும் முதலிடத்தில் உள்ளனர். நியூசிலாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 2025-26 ஆஷஸ் 5வது டெஸ்ட் சிட்னியில் நடைபெறவுள்ளது ஆஸ்திரேலியா ஏற்கனவே மூன்றாவது டெஸ்டில் அடிலெய்டில் வென்று ஆஷஸ் கோப்பையை தக்கவைத்திருந்த போதிலும், இங்கிலாந்து அணி ஒயிட்வாஷ் ஆகாமல் தப்பித்தது.இரு அணிகளும் 2025-26 ஆஷஸ் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்டில் ஞாயிறு, ஜனவரி 4 முதல்  சிட்னி கிரிக்கெட் கிரவுண்டில்  மோதவுள்ளன.

- Advertisement -