நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில், டெல்லி அணி குஜராத் அணியை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டெல்லி அணியின் இந்த வெற்றியில் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர், கேப்டன் என ரிஷப் பண்ட் மிகப்பெரிய பங்கை வகித்தார். மேலும் ரிஷப் பண்ட் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து நியூசிலாந்தின் சைமன் டால் முக்கிய கருத்து ஒன்றை கூறி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் நேற்று குஜராத் அணிக்கு எதிராக பேட்டிங்கில் 43 பந்துகளை சந்தித்து 88 ரன்கள் ஆட்டம் இழக்காமல் குவித்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் அடக்கம். பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் வந்தார். ஆரம்பத்தில் பொறுமை காட்டி, பிறகு இன்னிங்ஸை அற்புதமான முறையில் கொண்டு சென்று பினிஷிங் செய்தார்.
அதே சமயத்தில் விக்கெட் கீப்பிங் அபாரமான இரண்டு கேட்ச் எடுத்தார். வேகப்பந்து வீச்சுக்கு ஸ்டெம்புக்கு முன்னால் வந்து விக்கெட் கீப்பிங் செய்து ஷாருக்கான் விக்கெட்டை அவர் கைப்பற்றிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது. மேலும் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ராகுல் திவாட்டியா தந்த கேட்சை எடுத்ததும் சிறப்பானது.
இப்படி ரிஷப் பண்ட் பேட்ஸ்மேன் ஆகவும் விக்கெட் கீப்பராகவும் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கின்ற காரணத்தினால், வருகின்ற டி20 உலகக் கோப்பையில் முதன்மை விக்கெட் கீப்பராக இந்திய அணியில் தேர்வாகக் கூடிய இடத்திற்கு சென்றுவிட்டார். அதே சமயத்தில் அவர் எந்த இடத்தில் பேட்டிங் செய்வது சரியாக இருக்கும்? என்ற கேள்வியும் எழுகிறது.
தற்பொழுது இதுகுறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் சைமன் டால் கூறும் பொழுது “அவர் உலகக் கோப்பை இந்திய அணிக்கு மிகவும் நெருங்கி வருகிறார். அவரால் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய முடியுமா? ஏனென்றால் நான் திரும்பி சென்று டி20 உலகக்கோப்பை இந்திய அணியைப் பார்க்கிறேன். அப்படி பார்க்கும் பொழுது அவர் மிடில் ஆர்டருக்கு பொருந்தவில்லை. மூன்றாவது இடம் அவருக்கு கிடைக்கும் என்றால், அவர் உலகக் கோப்பைக்கு விமானம் ஏறுவதற்கு தயாராகிவிட்டார்.
இதையும் படிங்க : நான்சென்ஸ் மாதிரி பண்ணாதிங்க.. நான் ருதுராஜ் தோனியை பத்தி என்ன சொன்னேன்? – கொதித்து எழுந்த அம்பதி ராயுடு
ரிஷப் பண்ட் ஒரு ஸ்லாக்கர், ஒரு ஹிட்டரை விட சிறந்த பேட்ஸ்மேன். அவர் தனது இன்னிங்ஸை மிகவும் எளிதாக மாற்றக்கூடியவர். இதனால்தான் அவர் மிகச்சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என நான் கூறுகிறேன். ஆனால் அவர் வெளியில் வந்து தடாலடியாக அடித்து நொறுக்க கூடிய பேட்ஸ்மேன் கிடையாது. எனவே தற்போது மாறிவரும் டி20 கிரிக்கெட்டில் மிடில் வரிசையில் விளையாட முடியாது. எனவே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஆட்டத்தை துவங்க, ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தில் வர முடிவதுதான் சரியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.