“2024 டி20 உலக கோப்பை.. இந்த 4 பசங்களும் கட்டாயம் விளையாடனும்.. ஆனா கில்..!” – கிரண் மோரே பேச்சு!

0
329
Gill

இந்தியாவில் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி மே மாதம் இறுதியில் முடிவடைகின்ற ஐபிஎல் தொடருக்கு அடுத்து, ஜூன் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.

2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதியில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பிறகு, ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் இந்திய டி20 அணிக்கு தேர்வாகவில்லை.

- Advertisement -

இதன் பிறகு 14 மாதங்கள் கழித்து தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு வந்திருக்கிறார்கள். எனவே இவர்கள் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவது உறுதியாகியிருக்கிறது.

இதன் காரணமாக இந்திய அணியில் சில நல்ல திறமையான இளம் வீரர்கள் தங்கள் இடங்களை இழக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்திய டி20 அணியின் திட்டங்கள் அனைத்தும் தற்போது மாற்றம் அடைந்திருக்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிரண் மோரே கூறும் பொழுது ” ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் இணையும் பொழுது இடது வலது பேட்டிங் காம்பினேஷன் கிடைக்கிறது. ஜெய்ஸ்வால் ஒரு விதிவிலக்கான வீரர். அவர் ஆக்ரோஷமாக விளையாடுவதோடு முதல் பந்திலேயே பவுண்டரிகள் சிக்ஸர்கள் அடிப்பதற்கு தயாராக இருக்கிறார்.

- Advertisement -

சுப்மன் கில் நிச்சயமாக ஒரு நல்ல வீரர். ஆனால் டி20 கிரிக்கெட்டுக்கு இடது வலது கை காம்பினேஷனில்தான் செல்ல வேண்டும். எனவே இவருக்கு முன்னால் ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும்.

ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா இருவரும் நல்ல வீரர்கள். திலக் வர்மா 360 டிகிரியில் விளையாட கூடியவர். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இவர்கள் இருவரையும் தொடர்ந்து அழைத்துச் செல்ல வேண்டும்.

அர்ஸ்தீப் சிங் இடது கை வேகப்பந்து பேச்சாளராக ஒரு நல்ல வகையை கொண்டு வருகிறார். நான் இடது கை பந்துவீச்சாளர்களை எப்பொழுதும் நம்புவேன். அவர்கள் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவார்கள். ஏனென்றால் அவர்கள் வித்தியாசமான கோணத்தை பந்துவீச்சில் உருவாக்குகிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!