2024 டி20 உலக கோப்பை.. இந்திய அணியில் சிவம் துபே இருப்பதற்கான 4 முக்கிய காரணங்கள்

0
240
Shivam

கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு முதல் முதலில் 1975 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. அதிலிருந்து நான்காண்டுகளுக்கு ஒரு முறை உலகக்கோப்பை தொடர் நடத்தப்பட்டது.
இதன் காரணமாக உலகக் கோப்பை தொடருக்கு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

தற்பொழுது ஒரு வருடத்திற்கு ஒரு உலகக்கோப்பை தொடர் என்கின்ற அளவுக்கு மாறிவிட்டது. மூன்று வடிவத்திற்கும் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களை நடத்துவதால், ஏதாவது ஒரு வடிவத்தின் உலகக்கோப்பை தொடர் ஒவ்வொரு ஆண்டிலும் வந்து விடுகிறது.

- Advertisement -

இந்த வகையில் இந்த ஆண்டு டி20 உலக கோப்பைத் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. இந்த தொடரில் பங்குபெறும் 20 அணிகளும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதால், எல்லா அணிகளும் அதை நோக்கிய தயாரிப்பில் இருக்கின்றன.

தற்பொழுது இந்திய டி20அணிக்கு இடதுகை பேட்டிங் மிதவேக பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சிவம் துபே ஒரு நல்ல வரவாக இருக்கிறார். அவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற வேண்டிய முக்கிய நான்கு காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.

பவர் ஹிட்டர் :
மகேந்திர சிங் தோனியின் வெற்றிக்கு அவரது கிரிக்கெட் அறிவு எந்த அளவிற்கு முக்கிய காரணமோ, அந்த அளவிற்கு அவருடைய பவர் ஹிட்டிங் எபிலிட்டி காரணம். பவர் அதிகம் கொடுப்பதால் பவுண்டரி எல்லைக்கு மற்றவர்கள் வெளியில் அடிக்க முடியாத பந்துகளையும் அடிக்க முடியும். டைம் கொஞ்சம் தவறினால் கூட பந்து பவுண்டரி எல்லையை தாண்டி விடும். மேலும் சில பந்துகளை நிலைப்பதற்கு எடுத்துக் கொண்டாலும், அதை பவர் ஹிட்டிங் மூலம் ஈடு கட்டிவிடலாம். மேலும் உயரமானவர் என்பதால் லாங் லீவர் மூலம், நின்ற இடத்தில் இருந்து சிக்சர் விளாச முடியும்.

- Advertisement -

லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன் :
தற்பொழுது டி20 கிரிக்கெட்டில் இடதுகை சுழற்பந்து வீச்சு மற்றும் லேக் ஸ்பின் இவைகள்தான் சுழற்பந்து வீச்சில் பிரதான ஆயுதமாக இருக்கின்றன. எனவே இந்த வகையான சுழற் பந்து வீச்சை லெப்ட் ஹேண்ட் பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்டு விளையாடுவது எளிதாக இருக்கும். மேலும் ரைட் – லெப்ட் காம்பினேஷன் அமைப்பதின் மூலம், பவுலர்களை செட்டில் ஆக விடாமல் செய்யலாம். இவர் களம் இறங்கக்கூடிய நேரத்தில் சுழற் பந்துவீச்சுதான் வீசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிடில் ஆர்டர் / பினிஷர் :
இந்திய அணிக்கு முதல் மூன்று இடங்களில் விளையாடுவதற்கு நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். அதே சமயத்தில் மிடில் ஆர்டரில் விளையாடவும் ஆட்டத்தை முடித்து தரவும் வீரர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இதற்கென்று பேட்டிங் மற்றும் மனநிலையில் தனித்த விஷயங்கள் தேவைப்படுகிறது. இவைகள் சிவம் துபேவுக்கு சில ஆண்டுகளாக இருக்கிறது என்பது சாதகமான விஷயம்.

இம்ப்ரூவ்ட் பவுலர் :
சிவம் துபே மிதவேக பந்துவீச்சாளர் என்பது தெரிந்த விஷயம். ஆனால் தற்பொழுது அவர் பந்துவீச்சில் பின்புறக் கையால் வீசப்படும் மெதுவான பந்தை பயிற்சி செய்து சிறப்பாக வீசுகிறார். மேலும் அவர் தன்னுடைய பந்துவீச்சு வேகத்திலும் வேலை செய்து இருக்கிறார். எனவே இந்த வகை பந்துவீச்சாளர் மெதுவான ஆடுகளங்களை கொண்ட வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் தாக்கத்தை உண்டாக்க முடிபவர்களாக இருப்பார்கள்.