இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணி தற்பொழுது ஜஸ்பிரீத் பும்ரா தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து நாட்டில் முகாமிட்டு இருக்கிறது!
இந்தத் தொடரில் ருத்ராஜ் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் இந்திய டி20 அணியில் முதல் வாய்ப்பை பெற்று விளையாடியிருக்கிறார்கள்.
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகச் சிறப்பாக செயல்பட்ட சிவம் துபே, பேட்டிகின் நடுவரசையிலும் ஃபினிஷிங்கலும் மிகச் சிறப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு செயல்பட்ட ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் கவனம் இருக்கும் விதமான வாய்ப்பை பெற்றார்கள்.
இந்திய டி20 அணிக்கு தற்பொழுது இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், யாரை எடுப்பது? யாரை விடுவது? என்பதுதான். அந்த அளவிற்கு டி20 கிரிக்கெட்டுக்கு இந்தியாவில் நிறைய இளம் வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். 2024 ஆம் ஆண்டு அதாவது அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை நடைபெற இருக்கிறது.
தற்பொழுது அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார்படுத்துவது எப்படி அமையலாம் என்று பேசிய அஸ்வின் கூறும் பொழுது
“இந்த ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடியதன் மூலமாக ரிங்கு சிங் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். இதன் மூலமாக அவர் நமக்கு பக்கத்து வீட்டு பையன் போல ஆகிவிட்டார். இவரை அடுத்த டி20 உலகக்கோப்பைக்காக ஒரு பினிஷராக தேர்ந்தெடுத்து, இப்போது இருந்து இந்த தொடரில் ஆரம்பித்து வளர்த்தெடுப்பார்களா? என்று பார்க்க வேண்டும்.
கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் பினிஷராக பரபரப்பாக செயல்பட்டவர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜிதேஷ் சர்மா. ஜித்தேஷ் வலது கை, ரிங்கு சிங் இடது கை. இந்த இரண்டு பேரும் பேட்டிங் வரிசையில் பினிஷிங் இடத்தில் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்திற்கு மிகவும் பொருத்தமானவர்கள்.
ஆனால் இருந்தாலும் தற்பொழுது விக்கெட் கீப்பராக ஜிதேஷ் சர்மாவை விட சஞ்சு சாம்சன் முன்னுரிமை பெறுவார் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது அவர் மூன்றாவது இடத்தில் பேட் செய்வதற்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குறைந்தபட்சம் அவர் நான்காவது இடத்திலாவது பேட்டிங் செய்வார்.
தற்பொழுது மிக முக்கியமான விவாதமாக சாம்சனை மிகவும் கீழே அனுப்பி அவரை வீணடிக்கிறார்கள் என்பது இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னால் முதல் நான்கு இடங்களில் அவரை நுழைக்க முடியாத அளவுக்கு வீரர்கள் இருந்தார்கள்.
எங்களிடம் ரோகித், கில், விராட் மற்றும் ஸ்ரேயாஸ் என நான்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் முதல் நான்கு இடங்களில் இருந்தார்கள். இப்படி இருக்கும் பொழுது எங்களால் சஞ்சுவை எப்படி எடுத்து இருக்க முடியும்? அதனால்தான் பேட்டிங் வரிசையில் எங்கு வெற்றிடம் இருந்ததோ, அந்த இடத்திற்கு அவரை முயற்சி செய்து பார்த்தார்கள்!” என்று கூறியிருக்கிறார்!