இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இளம் இந்திய அணி இன்று தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு சென்றடைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் போட்டி தொடங்கும் நேரம், தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
இந்தியா தென்னாபிரிக்கா டி20 கிரிக்கெட் தொடர்
தற்போது தோல்வி பாதையில் சென்று கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய டி20 அணி அந்த தோல்விக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக இந்த டி20 தொடரில் வெற்றி பெற முயற்சிப்பார்கள்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் கடந்த ஜூன் 29ஆம் தேதி டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய நிலையில் அதில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்த சூழ்நிலையில் இறுதிப்போட்டி தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக தென் ஆப்பிரிக்க அணி தங்களது சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்த தயாராகி வருகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 அணியில் இளமை மற்றும் அனுபவம் கலந்த வீரர்களும் தென்னாப்பிரிக்கா அணியில் அதே அளவு திறமை கொண்ட வீரர்களும் இருக்கின்றனர்.
போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம்
முதல் நான்கு போட்டிகளும் 8, 10, 13, 15ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இந்த நான்கு போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 9:30 மணிக்கு தொடங்க உள்ளது. இது இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மற்றும் இணையதளத்தில் ஜியோ சினிமா ஆப்பில் நேரடியாக லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:வெறும் லக்ல ஆஸி ஜெயிச்சுட்டாங்க.. ஆனா இதை செய்யவே கூடாதுனு உறுதியா இருந்தோம் – பாகிஸ்தான் அணி கேப்டன் பேட்டி
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இதுவரை 27 போட்டிகளில் மோதியுள்ள நிலையில் அதில் 15 போட்டிகளில் இந்திய அணியும், 11 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றிருக்கிறது ஒரு போட்டியில் முடிவு இல்லை. மேலும் வருகிற 22ம் தேதி முதல் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.