ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆன முஹம்மது ரிஸ்வான் ஆஸ்திரேலியா அணி லக்கில் ஜெயித்திருப்பதாக சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா பாகிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெற்றி பெற்ற பின்னர், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இன்று காலை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணியினரின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் 203 ரன்கள் குவித்தது.
அதற்குப் பிறகு பேட்டிங் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி ஒரு கட்டத்தில் 139 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இறுதிக் கட்டத்தில் அணியின் கேப்டன் கம்மின்ஸ் சிறப்பாக விளையாடி 32 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் ஆஸ்திரேலியா அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ஷ்டம் இருப்பதாகவும் மேலும் முடிந்தவரை இந்த தொடரில் வெற்றி பெற போராடுவோம் என்றும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வான் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ஷ்டம் இருந்தது
இது குறித்து அவர் கூறும் போது “இந்தப் போட்டியில் அதிர்ஷ்டம் ஆஸ்திரேலியாவின் பக்கம் இருந்தது. அதனால் அவர்கள் வெற்றி பெற்றனர். நாங்கள் எப்போதும் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக இருப்பதைப் பார்க்க முடியும். இந்த போட்டியில் ஹாரிஸ் ராப் சிறப்பாக பந்து வீசினார். நாங்கள் ஐந்தாவது அல்லது ஆறாவது பந்துவீச்சாளரிடம் செல்ல வேண்டாம் என்று ஒரு குழுவாக முடிவெடுத்தோம்.நான்கு பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்தோம்.
இதையும் படிங்க:நியூசி தோல்வி.. இந்திய அணியை தட்டி எழுப்பிட்டாங்க.. ஆனா எங்களுக்கு ஒரு நல்ல விஷயம் இருக்கு – ஆஸி வீரர் பேட்டி
எந்த சூழ்நிலை வந்தாலும் தைரியத்தோடு போராட வேண்டும் என்று முடிவு செய்தோம். இது நன்றாகவே அமைந்திருக்கிறது இது போன்ற போட்டியை நீங்கள் எதுவும் சொல்ல முடியாது. இந்த விளையாட்டில் எதையும் கணிப்பது கடினம். ஆனால் முடிவு கடவுளின் கையில் உள்ளது. இருப்பினும் எங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் கீப்பிங் மற்றும் பீல்டிங் மாற்றுவதில் பிஸியாக இருந்தேன்” என்று கூறியிருக்கிறார்.