உறுதியா நம்புறேன்.. 2024-ல் ஐபிஎல் கோப்பையை ஜெயிக்க போற அணி இவங்க தான்.. ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

0
9013

2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், அதைப் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ஐபிஎல் பொறுத்தவரை வலுவான அணிகள் என்று எடுத்துக் கொண்டால் சென்னை, மும்பை மற்றும் பெங்களூர் அணிகள். சென்னை மற்றும் மும்பை தலா இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன.

ஆனால் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகக் கருத்தப்படும் பெங்களூர் அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்ற சோகம் இன்னமும் நீடிக்கிறது. அப்போதைய கேப்டன் கும்பிளே முதல் தொடங்கி ராகுல் டிராவிட், விராட் கோலி, டேனியல் வெட்டோரி மற்றும் டு பிளசிஸ் வரை சிறந்த கேப்டன்கள் அணியை வழி நடத்தி விட்டனர். மேலும் கிறிஷ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் என அதிரடி நட்சத்திர வீரர்களையும் பெற்றுள்ளது.

- Advertisement -

தொடர் முழுவதும் பெரும்பாலும் சிறப்பாகவே செயல்படும் பெங்களூரு அணி, நாக் அவுட் போட்டிகளில் ஏமாற்றி விடுகிறது. பேட்டிங்கில் அசுர பலத்துடன் களமிறங்கும் பெங்களூரு அணி பந்துவீச்சில் தடுமாற்றத்தை சந்திக்கும். பௌலிங்கைப் பொறுத்த வரை ஒரு சில நட்சத்திர வீரர்களைத் தவிர வலிமையான பந்து வீச்சினை பெங்களூர் அணி கொண்டிருக்க வில்லை. இதனால் பௌலிங்கில் முக்கியமான கட்டத்தில் சொதப்பி விடுவதால் நாக் அவுட் போட்டியில் வெற்றி பெற முடிவதில்லை.

இதனை சரி செய்யும் வகையில் தற்போது நடந்து முடிந்த மினி ஏலத்தில் பெங்களூரு அணி பந்து வீச்சில் கவனம் கொண்டு தகுந்த வீரர்களை அணிக்கு வாங்கியுள்ளது. கடந்த சீசனில் மும்பை அணிக்கு சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த கேமரூன் கிரீனை தற்போது பெங்களூர் அணி 15 கோடிக்கு வாங்கியுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கக் கூடியவர்.

கடந்த ஆண்டு குஜராத் அணியில் சிறப்பாக பந்து வீசிய அல்சாரி ஜோசப் அவரது அடிப்படை விலையான ஒரு கோடியில் இருந்து பெங்களூர் அணி போட்டி போட்டு 11.50 கோடிக்கு வாங்கி உள்ளது. மேலும் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசனையும் பெங்களூர் அணி எடுத்துள்ளது. எனவே தற்போதைய அணி குறித்து பெங்களூரு அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் மற்றும் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ‘மிஸ்டர் 360’ என்று அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ் வீடியோ நேர்காணலில் இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை விலை அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்த அவர் கூறியதாவது
“பெங்களூரு அணி 2024ஆம் ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் கோப்பையை வெல்லும். நான் அதை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் அமைதியாக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று இன்ஸ்டாகிராம் வீடியோ காலில் ஜே கபூருடன் பகிர்ந்து கொண்டு உள்ளார். முன்னாள் பெங்களூர் அணியின் ஜாம்பவான் டிவிலியர்ஸ் பந்தை அனைத்துத் திசைகளிலும் விலாசுவதில் வல்லவர்.

க்றிஷ் கெயிலின் ஆட்டம் அதிரடி என்றால் டிவில்லியர்ஸின் ஆட்டம் ‘உன்னத அழகியல்’. அவர் அடிக்கும் ஷாட்களில் எப்போதும் ஒரு அழகியல் உண்டு. எனவே பெங்களூரு அணியின் ஆட்ட சூழ்நிலைகளை நன்கு அறிந்த இவர் பெங்களூர் அணி கோப்பையை வெல்லும் என்று ஆருடம் கூறி இருக்கிறார்.