இந்திய கிரிக்கெட்

இந்திய அணி நட்சத்திர வீரர்கள் ஆடும் துலீப் டிராபி.. போட்டி அட்டவணை அறிவிப்பு.. முழு விபரங்கள்

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்க இருக்கும் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறும் துலீப் டிராபி நிறைய கவனம் பெற்று இருக்கிறது. காரணம் இந்திய நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக தெரிகிறது. இன்று இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடுகிறது. மேலும் இடையில் 40 நாளுக்கும் மேல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எதிலும் இந்திய வீரர்கள் விளையாடவில்லை.

எனவே அடுத்து பத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணி வீரர்கள் துலீப் டிராபியில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. இப்போதைக்கு பும்ரா, விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய நால்வர் மட்டுமே விளையாடாமல் இருக்கலாம் என்று தெரிகிறது. மீதி அனைவருமே இந்திய அணியில் இருந்து பங்கேற்பார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது.

கடந்த முறை 6 மண்டலங்களாக ஆறு அணிகள் பிரிக்கப்பட்டு இறுதிப் போட்டி நடத்தப்பட்டு சாம்பியன் அணி கண்டறியப்பட்டது. ஆனால் இந்த முறை இந்தியா ஏ,பி,சி,டி என நான்கு அணிகள் இன்று மட்டுமே பிரிக்கப்படுகிறது. மேலும் லீக் சுற்றில் முடிவில் எந்த அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறதோ அந்த அணியே சாம்பியன் அணியாகவும் அறிவிக்கப்படும்.

- Advertisement -

இந்த தொடரின் போட்டிகள் அனைத்தும் ஆந்திர மாநிலம் அனந்தபூர் கிரிக்கெட் வளாகத்தில் இருக்கும் இரண்டு வயதானத்தில் நடத்தப்படுகின்றது. மேலும் இங்கு விமான வசதி நேரடியாக இல்லாத காரணத்தினால், முதல் சுற்றில் இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றவர்கள் விளையாடினால் முதல் சுற்றுப்போட்டி மட்டும் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்திற்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இலங்கை தொடர்.. பென் ஸ்டோக்ஸ் விலகல்.. 26 வயது வீரர் கேப்டனாக அறிவிப்பு.. இங்கிலாந்து கிரிக்கெட் முடிவு

2024 துலீப் டிராபி தொடர் அட்டவணை :

செப்டம்பர் 5-8, 2024: இந்தியா A vs இந்தியா B – இடம்: ரூரல் டெவலப்மெண்ட் டிரஸ்ட் ஸ்டேடியம், அனந்தபூர்* (இடம் மாற்றத்திற்கு உட்பட்டது)

செப்டம்பர் 5-8, 2024: இந்தியா சி vs இந்தியா டி – இடம்: ஏசிஏ ஏடிசிஏ மைதானம், அனந்தபூர்* (இடம் மாற்றத்திற்கு உட்பட்டது)

செப்டம்பர் 12-15, 2024: இந்தியா A vs இந்தியா D – இடம்: ரூரல் டெவலப்மென்ட் டிரஸ்ட் ஸ்டேடியம், அனந்தபூர்

செப்டம்பர் 12-15, 2024: இந்தியா B vs இந்தியா C – இடம்: ஏசிஏ ஏடிசிஏ மைதானம், அனந்தபூர்

செப்டம்பர் 19-22, 2024: இந்தியா A vs இந்தியா C – இடம்: ரூரல் டெவலப்மென்ட் டிரஸ்ட் ஸ்டேடியம், அனந்தபூர்

செப்டம்பர் 19-22, 2024: இந்தியா B vs இந்தியா D – இடம்: ஏசிஏ ஏடிசிஏ மைதானம், அனந்தபூர்

- Advertisement -
Published by

Recent Posts