இலங்கை தொடர்.. பென் ஸ்டோக்ஸ் விலகல்.. 26 வயது வீரர் கேப்டனாக அறிவிப்பு.. இங்கிலாந்து கிரிக்கெட் முடிவு

0
1945

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது அவருக்கு பதிலாக 26 வயதான இங்கிலாந்து வீரரை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது.

- Advertisement -

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெற்றி பெற்றதன் மூலம் மிகுந்த நம்பிக்கையோடு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் களமிறங்க உள்ளது.

இந்த சூழ்நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்ற வரும் பிரான்சிஸ் கிரிக்கெட் தொடரான 100 லீக் தொடரில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் மற்றும் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் இடையேயான போட்டியின் போது நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் தொடை பகுதியில் காயம் அடைந்தார். காயம் தீவிரமடைந்துள்ள நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டரில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கேப்டனாக இருக்கும் சூழ்நிலையில் அவருக்கு பதிலாக 26 வயது வீரரான இங்கிலாந்தின் ஒல்லி போப் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இங்கிலாந்து அணியில் சீனியர் வீரர்களான ஜோ ரூட் இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் போப்பிற்கு ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறது. எனவே இதில் தனது கேப்டன்ஷிப்பை நிரூபிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டோக்ஸ் கடைசியாக 2023 ஆம் ஆண்டு முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு திரும்பினார். ஆனால் பேட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர், பந்து வீசுவதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் சமீபத்திய தொடர்களில்தான் ஓரளவு பந்து வீசினார். தற்போது ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில் களம் இறங்கும் இங்கிலாந்து அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:ஐபிஎல் வரும்னு காத்துகிட்டு இருந்தேன்.. ஆனா இந்த பிரச்சனை என்ன இன்னும் மோசமாகிருச்சு – உம்ரான் மாலிக் பேட்டி

இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21 ஆம் தேதி மான்செஸ்டர் நகரத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி 29ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்திலும் மூன்றாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 6ம் தேதி ஓவல் மைதானத்திலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணி சுழற் பந்துவீச்சில் வலுவாக விளங்குவதால் இந்த இரண்டு அணிகளுக்கிடையான போட்டி தொடர் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -