2023 ODI உலக கோப்பை.. அதிக ரன் அடித்த பேட்ஸ்மேன்கள்.. டாப் 10 பட்டியல்!

0
14755
Virat

இந்தியாவில் 13-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிகவும் பரபரப்பான முறையில் தற்போது சூடு பிடித்து நடக்க ஆரம்பித்து இருக்கிறது!

10 அணிகள் பங்கு பெறும் இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு போட்டியில் விளையாடும் என்ற வகையில், லீக் சுற்றில் ஒவ்வொரு அணிக்கும் ஒன்பது போட்டிகள் கிடைக்கும்.

- Advertisement -

இந்த வகையில் எல்லா அணிகளும் மூன்றில் ஒரு பகுதி ஆட்டத்தை அதாவது மூன்று ஆட்டத்தை லீக் சுற்றில் விளையாடி முடித்திருக்கின்றன. இதில் இந்தியா, நியூசிலாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் நான்கு ஆட்டங்கள் விளையாடி இருக்கின்றன.

இந்த தொடரின் ஆரம்பத்தில் சதங்கள் நிறைய வந்தன. பிறகு சதங்கள் குறைவாகி கொஞ்சம் கொஞ்சமாக பந்துவீச்சாளர்கள் ஆதிக்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்திற்குள் வந்திருக்கிறார்கள்.

சில நாட்களாக சதம் வராத நிலையில், நேற்று மகாராஷ்டிரா புனே மைதானத்தில் இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், இந்திய அணியின் ரன் மெஷின் தன்னுடைய 48வது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை நிறைவு செய்து அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டிக்கு பின்பு, நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்திருக்கும் பேட்ஸ்மேன்கள் யார் என்று இந்த சிறிய கட்டுரையில் பார்ப்போம்.

இந்தப் பட்டியலில் இந்திய அணியின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முதல் இரண்டு இடத்தை தற்பொழுது தற்காலிகமாக பிடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தை நியூசிலாந்தின் கான்வே பிடித்திருக்கிறார். மொத்தப் பட்டியலை கீழே பார்ப்போம்!

ரோஹித் சர்மா – 265 ரன் – 4 போட்டி
விராட் கோலி – 259 ரன் – 4 போட்டி
டெவோன் கான்வே – 249 ரன் – 4 போட்டி முகமது ரிஸ்வான் – 248 ரன் – 3 போட்டி
குயின்டன் டி காக் – 229 ரன் – 3 போட்டி
ரச்சின் ரவீந்தரா 215 ரன் – 4 போட்டி
குசல் மெண்டிஸ் 207 ரன் – 3 போட்டி
டேவிட் மாலன் – 186 ரன் – 3 போட்டி
ஜோ ரூட் – 170 ரன் – 3 போட்டி
எய்டன் மார்க்ரம் – 163 ரன் – 3 போட்டி