2023 ஐபிஎல் ஏலம்.. தோனி நிச்சயம் இந்த இந்திய பிளேயருக்குதான் போவார்.. 12 கோடி ஆனாலும்..!” – அஸ்வின் பரபரப்பு கணிப்பு

0
24991
Ashwin

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் 17வது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் 19ஆம் தேதி துபாயில் நடக்க இருக்கிறது.

இதற்காக வீரர்களை வெளியிடுவது தொடர்பாக 10 அணிகளும் தங்களுடைய இறுதி அணியை வெளியிட்டு இருக்கின்றன. மேற்கொண்டு வீரர்களை பரிமாற்றம் செய்வது மட்டும் டிசம்பர் 13 ஆம் தேதி வரையில் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த வகையில் டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்தரா, பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், டேரில் மிட்சல் மற்றும் ஜெரால்ட் கோட்சி ஆகியோர் மினி ஏலத்தில் அதிக விலை போகக் கூடிய வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

தற்பொழுது சென்னை அணி எட்டு வீரர்களை கழட்டி விட்ட பிறகும் கூட வலிமையானதாகவே இருக்கிறது. மிகக்குறிப்பாக அந்த அணியின் கையில் 32 கோடி பணமும் இருக்கிறது.

இதன் காரணமாக அவர்கள் எந்த குறிப்பிட்ட வீரரின் மேல் அதிக பணத்தை முதலீடு செய்து, தங்களது அணியை மேலும் பலமானதாக மாற்றுவார்கள் என்கின்ற எதிர்பார்ப்பு பொதுவாக ஐபிஎல் வட்டாரத்தில் இருக்கிறது. மேலும் மகேந்திர சிங் தோனி விடை பெறுவதாக இருந்தால், எதிர்காலத்தில் தக்க வைக்கும் அணி வலிமையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

- Advertisement -

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “தமிழக வீரர் ஷாருக்கானை ஏலத்தில் வாங்குவதற்கு குஜராத் அணிக்கும் சென்னை அணிக்கும் இடையே பெரிய போரே நடக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் குஜராத் அணி இந்திய பினிசரான ஹர்திக் பாண்டியா பேட்டிங் யூனிட்டில் இழந்துவிட்டது. அவர்களுக்கு ஒரு பவர் பிளேயர் தேவை.

ஷாருக்கான் ஒன்பது கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு பஞ்சாப் அணியில் இருந்தார். மேலும் அவர் தனது திறமைகளை நன்றாக வெளிப்படுத்தியதாக நான் உணர்ந்தேன். பஞ்சாப் அணி அவரை வெளியே விட்டது சரியானது கிடையாது. ஆனால் அவர் தற்போது இந்த ஏலத்தில் 12 முதல் 13 கோடிக்கு விலை போகப் போகிறார் என்று நினைக்கிறேன்.

ஷாருக்கானை வாங்குவதற்காக மிட்சல் ஸ்டார்க்கை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்காமல் விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் அவர்களிடம் உள்ளூர் வீரர்கள் யாரும் இருப்பு இல்லை. இதனால்தான் அவர்கள் மெகா ஏலத்திலும் ஷாருக்கான் வாங்குவதற்கு போட்டியிட்டார்கள். அதனால்தான் நான் இந்த முறை வாங்குவார்கள்!” என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்!