175 ரன் முன்னிலை.. கேஎல்.ராகுல் ஜடேஜா மாஸ்டர் பேட்டிங்.. நெருக்கடியில் இங்கிலாந்து.. இந்தியா வெற்றி முகம்

0
497
Jadeja

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் துவங்கியது. இன்று தொடர்ந்து இரண்டாவது நாள் போட்டி நடைபெற்ற முடிவுக்கு வந்திருக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக 70 ரன்கள் எடுக்க 246 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

நேற்று இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ஓவரில் 119 ரன்கள் எடுத்திருந்தது. தளத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் இருந்தார்கள். இன்று இருவரும் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.

முதல் ஓவரை ஜோ ரூட் வீச ஒரு பவுண்டரி அடித்து 80 ரன்கள் உடன் ஆட்டம் இழந்து ஜெய்ஸ்வால் வெளியேறினார். சுப்மன் கில் 66 பந்துகளை சந்தித்து 23 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 63 பந்துகளில் 35 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள்.

இன்னொரு முனையில் சதத்தை நோக்கி வேகமாக முன்னேறிய கே எல் ராகுல் துரதிஷ்டவசமாக 126 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 86 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விக்கெட் கீப்பர் கேஎஸ்.பரத் தன் பங்குக்கு 81 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ரவீந்திர ஜடேஜா தவறால் 1 ரன்னில் ரன் அவுட் செய்யப்பட்டார்.

- Advertisement -

ஒரு முனையை இழுத்துப் பிடித்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா அரை சதத்தைக் கடந்தார். இவருடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார். பிறகு இந்த ஜோடி இன்றைய இரண்டாம் நாள் முடிவு வரை விக்கெட்டை கொடுக்காமல் சிறப்பாக விளையாடி முடித்தது.

இதையும் படிங்க : “கில் கிளீன் LBW.. அந்த பந்து எப்படி மேல போகும்?” – டக்கெட் டிஆர்எஸ் பற்றி கேள்வி

ரவீந்திர ஜடேஜா 155 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 81 ரன்கள், அக்சர் படேல் 62 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உடன் 35 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். இந்த ஜோடி 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் தற்பொழுது அமைத்திருக்கிறது. மேலும் இங்கிலாந்தை விட இந்திய அணி தற்பொழுது 175 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. ஜோ ரூட் மற்றும் டாம் ஹார்ட்லி இங்கிலாந்து தரப்பில் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த டெஸ்டில் இந்தியாவின் கையே பெரிய அளவில் ஓங்கி இருக்கிறது.