5வது டெஸ்ட் போட்டி ரத்து ஆனதால் இங்கிலாந்து நிர்வாகத்துக்கு இத்தனை கோடி நஷ்டமா

0
909
Ind vs Eng 5th Test

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆட திட்டமிட்டிருந்தது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1
முன்னிலை பெற்றிருந்தது. 5வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் இந்திய அணி வட்டத்திற்குள் கொரோனா பெருஞ்சுவரின் தாக்கம் அதிகமாக ஆரம்பித்த காரணத்தினால் தற்போதைக்கு இந்த 5வது டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா இருந்தது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பர்மர் அவர்களுக்கும் கொரோனா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஐந்தாம் நாள் ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பே ஒத்திவைக்கப்பட்டது. வீரர்கள் யாவருக்கும் கொரானா இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலும் கொரோனா பாதித்தவர்கள் உடன் வீரர்கள் நெருக்கமாக இருந்த காரணத்தினால் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இப்போது வரை ஆட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும் மற்றொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மட்டுமே தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் நடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் இப்படி ஒரு இடையூறு ஏற்பட்டதால் ஒரு ஆட்டம் ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது போல தற்போது இந்த டெஸ்ட் போட்டியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அணி ஆட்டத்தை இங்கிலாந்து இருக்கு வழங்கி விடவில்லை என்றும் தற்போது வரை ஆட்டம் வேறு ஒரு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளதாக மட்டுமே பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆணி மற்றும் இரண்டு அணிகளின் கிரிக்கெட் நிர்வாகமும் இணைந்து இந்த முடிவை எட்டியுள்ளதாக தெரிகிறது. இரண்டு அணி நிர்வாகமும் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆட்டம் நிச்சயமாக வேறு தேதியில் நடைபெறும்.

மேலும் ஒருவேளை ஐபிஎல் தொடர் இல்லாமல் இருந்திருந்தால் ஆட்டம் நிச்சயமாக இரண்டு நாட்களுக்குள் மீண்டும் தொடங்கி இருக்கும். ஆனால் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க இருப்பதால் அடுத்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர் உடன் இணைந்து இந்த மீதமிருக்கும் டெஸ்ட் போட்டியும் நடைபெறலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

இந்த ஒரு டெஸ்ட் போட்டியை தள்ளி வைப்பதால் மட்டுமே இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு சுமார் 200 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ரவி சாஸ்திரி பரத் அருண் மற்றும் ஸ்ரீதர் என மூன்று இந்திய அணியின் பயிற்சியாளர் களும் தற்போது கொரோனா காரணமாக தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். ஐபிஎல் போட்டிகளின் முடிவும் இந்த டெஸ்ட் தொடரில் ஆடிய வீரர்களின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டே எட்டப்படும் என்றும் தெரிகிறது.