2வருட பகை.. பதிலடி கொடுத்த கேஎல்.ராகுல்.. அர்ஸ்தீப் 5விக்கெட்.. தென் ஆப்பிரிக்கா சரண்டர்!

0
414
ICT

இந்திய தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மைதான புள்ளி விபரங்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்வதை சாதகமாக காட்டுகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவை இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அர்ஸ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் அப்படியே புரட்டிப்போட்டு விட்டார்கள். இவர்களது பந்துவீச்சின் முன்னாள் தென் ஆப்பிரிக்க அணி ஒட்டுமொத்தமாக சரணடைந்துவிட்டது.

போட்டியின் முதல் ஓவரை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் வீசினார். அவர் வீசிய முதல் பந்திலேயே எல்பிடபிள்யு அப்பில் கேட்க, அம்பயர் தரவில்லை. பேட்டில் பட்டிருக்கும் என இந்திய அணியும் ரிவியூ செய்யவில்லை. ஆனால் பின்பு அது அவுட் என்று தெரியவந்தது.

இதை சரி செய்யும் விதமாக இரண்டாவது ஓவருக்கு வந்த அர்ஸ்தீப் ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் வாண்டர் டேசன் என இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றி, இந்திய அணிக்கு மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்.

- Advertisement -

அர்ஸ்தீப் மேற்கொண்டு இரண்டு விக்கெட்டுகளோடு நிற்காமல் அடுத்து டோனி டி ஜோர்ஸி 28, ஹென்றி கிளாசன் 6 என இருவரையும் வெளியேற்றினார். ஏறக்குறைய இந்த இடத்திலேயே தென் ஆப்பிரிக்க அணி முடிவுக்கு வந்துவிட்டது.

இதற்கு அடுத்து வந்த ஆவேஷ் கான் தன் பங்குக்கு எய்டன் மார்க்ரம் 12, டேவிட் மில்லர் 2, வியான் முல்டர் 0, கேசவ் மகாராஜ் 4 என நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்று போட்டி நடைபெறும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க கேஎல்.ராகுல் பிடிவாதமாக இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை தொடர்ந்து மாற்றி மாற்றி வீச வைத்தார். அவருடைய கேப்டன்சி இன்று சிறப்பாக இருந்தது.

மேலும் இதே போல் 2021 தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக கேஎல்.ராகுல் கேப்டனாக பொறுப்பேற்று, ஒருநாள் தொடரை முழுமையாக இழந்தார். இன்று அதற்குதிருப்பி கேப்டனாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

தொடர்ந்து பந்து வீச வந்த அர்ஸ்தீப் சிங் பெஹுக்வாயோ விக்கெட்டை வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் ஐந்து விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். கேஎல்.ராகுல் ஆவேஷ் கானையும் திரும்பக் கொண்டு வந்து ஐந்து விக்கெட் எடுக்க வைக்க பார்த்தார், ஆனால் அது நடக்கவில்லை. இறுதி விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.

முடிவில் 27.3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அர்ஸ்தீப் சிங் பத்து ஓவர்களில் 37 ரன்கள் தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார். ஆவேஷ் கான் எட்டு ஓவர்களுக்கு மூன்று ஓவர்கள் மெய்டன் செய்து, 27 ரன்கள் தந்து நான்கு விக்கெட் கைப்பற்றினார். இன்று வீசப்பட்ட 27.3 ஓவரில் 25 ஓவர்களை இந்திய வேகப் வந்து வீச்சாளர்களை வீச வைத்திருக்கிறார் கேப்டன் கேஎல்.ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது!