“டீமை விட்டு தூக்க 2நிமிஷம் போதும்.. டிராவிட் புஜாரா மாதிரிதான் விளையாடனுமா?” – கில்லுக்கு ராகுல் ஓஜா ஆதரவு

0
358
Gill

இந்திய டெஸ்ட் அணிக்கு கடந்த ஆண்டுகளில் துவக்க ஆட்டக்காரராக இருந்து, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மூன்றாவது வீரராக சுப்மன் கில் தன்னைக் கீழே இறக்கி கொண்டார்.

இதற்குப் பிறகு அவர் விளையாடி இருக்கும் மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகளில், கடைசிப் பத்து இன்னிங்ஸ்களில் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 36 ரன்கள் தான்.

- Advertisement -

மேலும் 20 டெஸ்ட் போட்டிகளில் 37 இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கும் அவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவரேஜ் வெறும் 30 தான் இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் நிறைய போட்டி இருக்கும் நிலையில், தற்பொழுது இவருடைய இடம் மிக நெருக்கடியான நிலையில் இருக்கிறது.

ஏற்கனவே இந்திய டி20 அணியில் இவருடைய இடம் இன்னும் உறுதி செய்யப்படாத ஒன்றாகவே இருக்கிறது. இந்த நிலையில் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவர் தன்னை நிரூபிக்காவிட்டால் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றப்படுவது நடக்கலாம்.

இந்த நிலையில் இவருக்கு ஆதரவாக பேசி உள்ள கேஎல் ராகுல் கூறும் பொழுது “கில் ஒரு டாப் கிளாஸ் பிளேயர். அவர் சுழற் பந்துவீச்சை மிக நன்றாக விளையாடுவார். உலகக் கோப்பை தொடரில் அவர் எப்படி விளையாடினார் என்று நாம் பார்த்தோம். அதிலிருந்து அவர் கற்று டெஸ்ட் தொடருக்கு கொண்டு வருவார்.

- Advertisement -

அவர் இன்றைய போட்டியில் ரன் அழுத்தத்தில் இருந்தார். எனவே அவர் அதிரடியாக ஒரு ஷாட் விளையாடி அதிலிருந்து வெளியே வருவதற்கு பார்த்தார். அந்த நிலையில்தான் ஆட்டம் இழந்தார். இது எல்லோருக்குமே நடக்கக்கூடிய ஒன்றுதான்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் கில்லுக்கு ஆதரவாக பேசியுள்ள ஓஜா கூறும்போது ” நீங்கள் ஒரு வீரரை நீக்க விரும்பினால் இரண்டு நிமிடத்தில் அதை செய்துவிடலாம். ஆனால் நீங்கள் ஒரு வீரரை உருவாக்க வேண்டும் என்று விரும்பினால் அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். அவருடைய திறமை எங்களுக்கு தெரியும். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் ஆவது அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : “எங்க பேட்ஸ்மேன்கள் கேஎல்.ராகுல் பேட்டிங்கை பார்த்து இதை கத்துக்கனும்” – ஓவைஸ் ஷா கருத்து

ராகுல் டிராவிட் மற்றும் புஜாராவை நீங்கள் பேசினால், அவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக விளையாடுவார்கள். ஆனால் பேட்டிங்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்றாவது இடத்தில் அவர்களைப் போலத்தான் விளையாட வேண்டும் என்று கிடையாது” என்று கூறியிருக்கிறார்.