ஒரே நாளில் 13 விக்கெட்… கடைசி நாளில் ஜெயிக்கப் போவது யார்?.. பரபரப்பின் உச்சத்தில் பாகிஸ்தான்- இலங்கை முதல் டெஸ்ட்!

0
2749

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இரண்டு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருப்பதாகவே தோன்றுகிறது.

முன்னதாக முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடி 461 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இலங்கை அணியை விட 149 ரன்கள் முன்னிலை பெற்றது .

- Advertisement -

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இலங்கை மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 14 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது. இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் சீரான இடைவெளிகளில் விக்கெட்டை இழந்தது ஸ்ரீலங்கா.

இலங்கை அணியில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய தனஞ்செயா டிசில்வா 82 ரன்களையும் துவக்க வீரர் நிஷான் மதுசங்க்கா 52 ரன்களையும் ரமேஷ் மெண்டிஸ் 42 ரன்களையும் சேர்த்தனர் . இதனால் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரண்களை பெற முடிந்தது.

இதன் மூலம் இலங்கை அணி பாகிஸ்தான் அணிக்கு 131 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் நூமான் அலி மற்றும் அப்ரார் அகமது ஆகியோர் மூன்று விக்கெட்டுகளையும் ஷாஹீன் அப்ரிதி மற்றும் சல்மான் அகா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரரான அப்துல்லா ஷபிக் 8 ரண்களில் ஆட்டம் இழக்க அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ஷான் மசூத் 7 ரன்களிலும் நூமான் அலி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர். இன்றைய ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 48 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்னும் ஏழு விக்கெட்டுகள் மீதம் இருக்கும் நிலையில் அந்த அணி வெற்றிபெற 83 ரன்கள் எடுக்க வேண்டும்.

இமாம் உல் ஹக் 25 ரன்கள்டனும் பாபர் அசாம் 6 ரன்கள்டனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாளை ஒரு நாள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணியின் பக்கமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை கடைசி வரை என்ன நடக்கும் என்றே தெரியாது.