13ரன் 7விக்கெட்.. யார் இந்த ராஜ் லம்பானி?.. இர்பான் பதானுக்கு அடுத்த சாதனை!

0
380

துபாயில் தற்பொழுது 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஆசியக் கோப்பை தொடர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஏ பிரிவில் இந்திய அணி டிசம்பர் எட்டாம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது குழுவில் இடம் பெற்று இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் இன்று துபாய் ஐசிசி சர்வதேச மைதானத்தில் இந்திய அணி நேபாள் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துக் கொண்டது.

இந்திய அணிக்கு 18 வயதான பரோடாவை சேர்ந்த வலது கை வேகப்பந்துவீச்சாளர் ராஜ் லம்பானி அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்தினார். தனது உயரத்தை பயன்படுத்தி பந்தை பவுன்ஸ் செய்தும், சரியான இடங்களில் பந்தை தரை இறக்கியும், மேலும் பந்தை இருபுறம் திருப்பியும் நேபாள் பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

- Advertisement -

இவரது பந்துவீச்சை நேபாள் அணியினரால் எதுவுமே செய்ய முடியவில்லை. முடிவில் இவரது பந்துவீச்சில் 13 ரன்கள் மட்டும் பெற்றுக்கொண்டு, ஏழு விக்கெட்டுகளை தாரை வார்த்து, 52 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள். இந்த அணியின் 11 பேட்ஸ்மேன்களும் ஒருவர் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

இதற்குப் பிறகு களம் இறங்கிய இந்திய அணி விக்கெட் ஏதும் கொடுக்காமல் 7.1 ஓவரில் இலக்கை விரட்டி வெகு எளிதாக வெற்றி பெற்றது. மேலும் இந்த பிரிவில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறுவது உறுதி. இவர்கள் இறுதி போட்டியிலும் சந்திக்கலாம்.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் ராஜ் லம்பானி 9.1 ஓவர்கள் பந்து வீசி, 3 மெய்டன்கள் உடன், 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, ஏழு விக்கெட் கைப்பற்றி அசத்தினார். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் சார்பில் இது இரண்டாவது சிறந்த பந்துவீச்சு ஆகும். இதற்கு முன்பு இர்ஃபான் பதான் 2003 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக, 16 ரன்கள் மட்டும் தந்து 9 விக்கெட் வீழ்த்தி ஒட்டுமொத்தமாக முதலிடத்தில் இருக்கிறார்.