ஒரே ஆட்டத்தில் 11 கிரிக்கெட் வீரர்களும் பந்துவீசிய 4 தருணங்கள்

0
9780
Rahul Dravid Test

டெஸ்ட் கிரிட்கெட் இஸ் ய பெஸ்ட் கிரிக்கெட் என்று பலரும் சொல்வார்கள் அதற்கு காரணம் ஐந்து நாட்கள் தங்களுடைய அணியின் வெற்றிக்காக முழு போராட்ட குணத்தையும் வெளிக்கொண்டு வருவது இதன் சிறப்பு . ஒருநாள் மற்றும் டி-20 போன்ற விளையாட்டுகளின் முடிவை ஓரளவிற்கு கணிக்க முடியும் ஆனால் டெஸ்ட் பொறுத்து வரை அதனை கணிக்க முடியாது இதுவும் ஒரு சிறப்பு காரணம் . ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் வெற்றியை காட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றி சற்று அந்தஸ்த்தை உயர்த்தும்.

பல சரித்திர போட்டிகள் , சரித்திர வெற்றிக்கள் , பல சாதனைகள் என அடிக்கிக்கொண்டே போகும் டெஸ்ட் போட்டிகளில் பல வித்தியாசமான நிகழ்வுகளும் அவப்போது நிகழும் . அதன் ஒரு நிகழ்வாக ஒரு அணியின் 11 வீரர்களும் எதிரணிக்கு பந்து வீசியுள்ளனர் என்பதே . இச்சம்பவம் ஒரு முறையில்லாமல் 4 முறை அரங்கேறியுள்ளது. கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியில் விளையாடிய அனைத்து வீரர்களும் பந்து வீசிய ஒரு சில போட்டிகளை பற்றி தற்போது பார்ப்போம்

- Advertisement -

4. தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 2005

2005 ஆம் ஆண்டு நடந்த ஒரு டெஸ்ட் போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 588 ரன்களை குவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஆமை வேகத்தில் விளையாடி 747 இடங்களை பதிலுக்கு குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்ஸ்மேன்கள் ரன் அடித்துக் கொண்டே செல்வதை கண்டு கோபமடைந்த தென்ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அனைவரும் தாமாக முன்வந்து பவுலிங் வீசினார்கள். இருப்பினும் இறுதி வரை அவர்கள் 235 ஓவர் பிடித்து அந்த போட்டியை டிரா செய்தனர். அந்த போட்டியில் பந்து வீசிய ஏபி டிவில்லியர்ஸ் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க அணி இறுதியில் 2-0 என்ற கணக்கில் வென்றது.

3. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 2002

Sachin Tendulkar Bowling

2002ஆம் ஆண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று இருந்தது. அந்த தொடரில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் 513 ரன்களை குவித்திருந்தது.

- Advertisement -

இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் அதற்கடுத்து களமிறங்கி விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி மொத்தமாக 248 அவர்களை பிடித்து 629 ரன்களை குவித்தது. இறுதிவரை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்களை அவுட்டாக ஒவ்வொரு இந்திய அணி வீரர்களும் பந்து வீசினார்கள். எனினும் இறுதி வரை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிக சிறப்பாக செயல்பட இறுதியில் அந்த போட்டி டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.

2. ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் 1980

1480 ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஒரு டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்றது. தொடரில் 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 617 ரன்களை குவித்து இருந்தது.

போட்டியை எப்படியாவது டிரா செய்து விட வேண்டும் என்று நினைத்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தஸ்லிம் ஆரிப் மற்றும் ஜாவத் ஆகிய இருவரும் பிடிகொடுக்காமல் நீண்ட நேரம் பேட்டிங் செய்து கொண்டே இருந்தனர். இவர்களது விக்கெட்டை கைப்பற்ற நினைத்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவரும் வந்து பந்துவீசினர். இறுதியில் இவர்கள் இருவரும் இறுதி வரை அவுட் ஆகாமல் ( ஆரிப் 210 & ஜாவத் 106 ) களத்தில் நின்று போட்டியை டிரா செய்தது குறிப்பிடத்தக்கது.

1. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து – 1884

கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணியில் குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு வீரர்கள் எதிரணிக்கு பந்து வீசுவார்கள். ஆனால் 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி மிகவும் மெதுவாக விளையாட தொடங்கியது அதன் காரணமாக இங்கிலாந்து அணியில் இருந்த அனைத்து வீரர்களும் வந்து பந்துவீச தொடங்கினார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி 311 அவர்களுக்கு மேல் ஆமை வேகத்தில் விளையாடிக் கொண்டே போனது. அதன் காரணமாக அந்த போட்டி இறுதியில் டிரா ஆனது. அந்த டெஸ்ட் போட்டி தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.