ரொம்ப வேணாம்.. 100 ரன் போதும் இந்தியாவை தோற்கடிக்க.. தென் ஆப்பிரிக்கா கேப்டன் சவால் பேட்டி

0
11056

இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் 55 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

இதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய இந்திய அணி 153 ரன்கள் வரை நிதானமாக விளையாடினாலும், அதற்குப் பின்னால் வந்த வீரர்கள் டக்கவுட்டாகி ஏமாற்றம் அளித்ததால் 153 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. இதன் பிறகு 98 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது தென்னாபிரிக்கா அணி.

- Advertisement -

தற்போது 62 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது. தென்னாபிரிக்க அணியின் மார்க்ரம் 36 ரன்கள் உடன் களத்தில் இருக்கிறார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இன்னும் 36 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இருக்கிறது. இன்று தென்னாபிரிக்கா அணி சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணிக்கு ஒரு சவாலான ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்க முடியும்.

இந்திய அணியின் வெற்றி இலக்கு குறித்துப் பேசிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டீன் எல்கர்
“இந்த ஆடுகளத்தின் சூழ்நிலையைப் பார்க்கையில் இந்திய அணிக்கு 100 ரன்கள் என்பது போதுமான இலக்காக இருக்கும் என்று நான் கருதுகிறேன். இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்யும்பொழுது எங்கள் பந்து வீச்சு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் இது முற்றிலும் சாத்தியமே.

அவர்களின் பேட்டிங் வரிசையை சீர்குலைக்க எங்களால் முடியும். நாங்கள் முதல் இன்னிங்ஸில் குறைவான ரன்களுக்கு ஆட்டம் இழந்து விட்டோம். இந்த ஆடுகளத்தில் நீங்கள் முதலில் சற்று தடுமாறினாலும் பின்னர் சுதாரித்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் தலைகீழாக மாறிவிடும். எனவே பந்தினை சரியான இடத்தில் வீச வேண்டும். இதை இந்திய அணியினர் எங்களுக்கு எதிராக சிறப்பாகவே செயல்படுத்தினர்.

- Advertisement -

முதல் இன்னிங்ஸில் நாங்கள் விளையாடும் பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு பைத்தியக்காரத்தனமான நாளை அனுபவித்தோம். எங்களின் பந்துவீச்சாளர்களின் செயல்பாடு அற்புதமாகவே இருந்தது. பந்துவீச்சாளர்களை அவர்களது பாணியிலேயே செயல்பட விரும்புகிறேன். நாங்கள் முதலில் ரன்களைக் கசிய விட்டோம். பின்னர் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அதை கட்டுப்படுத்தினர்” என்று கூறினார்.

இது இந்திய அணிக்குத் தற்போது வாழ்வா? சாவா? போட்டியாகும் இதில் வெற்றி பெற்றால்தான் தொடரை இழக்காமல் சமன் செய்யவாவது முடியும். எனவே தென்னாபிரிக்க அணியைக் குறைந்த ரன்களில் கட்டுப்படுத்த வேண்டும். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி சவால் விடுக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.