“10ரன் பரபரப்பு.. கடைசி ஓவரில் சூர்யா இதைத்தான் சொன்னார்!” – அர்ஸ்தீப் அசத்தல் பேச்சு!

0
15730
Arshdeep

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட ஐந்தாவது டி20 போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்ற இருந்த நான்கு போட்டிகளில் மூன்றை வென்று தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தது. இந்த நிலையில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் முடிக்க நினைத்திருந்தது.

- Advertisement -

இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்து எட்டு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 53 ரன்கள் எடுத்தார். ஆடுகளம் கொஞ்சம் வேகம் குறைவாக இருந்ததால் பேட்டிங் செய்ய சிரமமாக இருந்தது.

இந்த நிலையில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணி மேக் டெர்மாட் 53 ரன்கள் எடுக்க வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் இவரது விக்கெட்டை அர்ஸ்தீப் சிங் கைப்பற்றினார்.

ஆனாலும் கடைசி இரண்டு ஓவர்களுக்கு 17 ரன்கள் தேவை என்கிற நிலை வந்தது. அப்போது பேட்டிங்கில் கேப்டன் வேட் இருந்து 19 ஆவது ஓவரில் ஏழு ரன்கள் சேர்த்தார். இதனால் கடைசி ஓவருக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

கடைசி ஓவரை மீண்டும் அர்ஸ்தீப் சிங் வீச முதல் இரண்டு பந்துகள் டாட் பந்துகளாக அமைந்தது. மூன்றாவது பந்தில் கேப்டன் மேத்யூ வேட் விக்கெட்டை அர்ஸ்தீப் சிங் மீண்டும் கைப்பற்றினார். மேலும் கடைசி மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பரபரப்பான நிலையில் இருந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முதல் மூன்று ஓவர்களில் அர்ஸ்தீப் சிங் 37 ரன்கள் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றிக்குப் பின் பேசிய அவர் “முதல் மூன்று ஓவர்களில் நிறைய ரன்கள் கொடுத்ததைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருந்தேன். நான் எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அதைத் தந்த கடவுளுக்கும் என்னை நம்பிய அணி நிர்வாகத்துக்கும் நன்றி.

நான் கடைசி ஓவரை வீசுவதற்கு முன்னால் சூர்யா என்னிடம் ‘எது நடக்குமோ அதுதான் நடக்கும். தைரியமாக வீசு” என்று சொன்னார். இந்திய அணியாக நாங்கள் நிர்ணயித்த தரநிலைகளின் படி விளையாடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் வலுவாக வருவேன் என்கின்ற நம்பிக்கை இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!