Uncategorized

நாங்க வெற்றிக்கு தகுதியானவர்கள் இல்லை.. எங்களுக்கு இந்த தோல்வி ரொம்ப அவசியமானது – கில் பேச்சு

நேற்று ஐபிஎல் தொடரில் குஜராத் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடி குஜராத் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

திடீர் எழுச்சி

இந்த ஐபிஎல் தொடரில் தற்போது குஜராத் அணி 16 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இவர்கள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் இன்னும் இவர்களுக்கு ஒரு போட்டி மீதம் உள்ளது.

மேலும் பலமான பேட்டிங் யூனிட் இல்லாமல் போனாலும் கூட பலமான பவுலிங் யூனிட்டை வைத்து குஜராத் அணி இந்த ஐபிஎல் தொடரில் சாதித்திருக்கிறது. ஜேசன் ஹோல்டரை அணிக்குள் கொண்டு வந்தது அவர்கள் அணியை பெரிய பலம் மிக்கதாக மாற்றி உள்ளது.

- Advertisement -

வெற்றிக்கு தகுதி இல்லை

இது குறித்து சுப்மன் கில் பேசும்போது “நாங்கள் இந்த ஆடுகளத்தை முதலில் பார்க்கும் பொழுது 200 முதல் 210 ரன்கள் எடுக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் 247 ரன்கள் எடுத்தார்கள் காரணம் நாங்கள் எங்களுக்கு எளிதாக வந்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை விட்டு விட்டோம். எங்களுக்கு பீல்டிங் மட்டுமே தற்பொழுது கவலையான விஷயம். மற்றபடி நாங்கள் சிறப்பாகவே இருக்கிறோம்”

இதையும் படிங்க : கம்பீர் கனவெல்லாம் பலிக்காது.. இந்திய கிரிக்கெட்டுக்கு ஹீரோஸ் தேவை.. அதுக்கு காரணம் இருக்கு – டிராவிட் அதிரடி

“நாங்கள் ஆரம்பத்திலேயே எளிதானம் ஒன்று கேட்ச் வாய்ப்புகளை விட்டு விட்டதால் இந்த போட்டியை வெல்வதற்கு தகுதி இல்லாதவர்கள் ஆகிவிட்டோம். மேலும் இப்படி ஒரு தோல்வி இந்த நிலையில் எங்களுக்கு நல்லதுதான். அடுத்து நாங்கள் குவாலிஃபயர் விளையாட இருக்கிறோம். எனவே இந்த தோல்வி எங்களுக்கு முன்னெச்சரிக்கையாக அமைந்துள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by