நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இருந்து விலகிய தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் லுங்கி நிகிடி இடத்துக்கு சிறப்பான எக்கனாமி இருக்கும் ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளரை ஒப்பந்தம் செய்து ஆர்சிபி அணி நிர்வாகம் அசத்தி இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடர் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட திடீர் பதட்டத்தின் காரணமாக இடையில் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்பட்டு கொண்டு வருகிறது. இதன் காரணமாக சில வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக சில முக்கிய வெளிநாட்டு வீரர்கள் கிடைக்காமல் மிக கடுமையான முறையில் ஆர்சிபி அணி பாதிக்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆர்சிபி அணியில் அனைத்து வெளிநாட்டு வீரர்களும் வந்து விட்டார்கள். அதே சமயத்தில் ப்ளே ஆப் சுற்றின் போது சில ஆர்சிபி வெளிநாட்டு வீரர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இந்த நிலையில் ஆர்சிபி அணி நிர்வாகம் வெளியேறக்கூடிய ஒவ்வொரு வெளிநாட்டு வீரர்களுக்கும் சரியான மாற்று வீரர்களை பிடித்து கொண்டு வருவதற்கும், சில வெளிநாட்டு வீரர்களை தொடர்ந்து தங்கள் அணியில் இருக்கும் படியும் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றில் மீண்டும் வலிமையாகவே களமிறங்கும்.
தற்போது லுங்கி நிகிடி இடத்திற்கு ஆர்சிபி அணி நிர்வாகம் ஜிம்பாப்வே வேகபந்துவீச்சாளர் பிளசிங் முசரபாணியை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ப்ளே ஆப் சுற்றின் போது ஜோஸ் கேசில்வுட் விளையாட முடியாவிட்டால் அவருடைய இடத்தில் விளையாடுவதற்கு சரியானவராக இவர் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. பல அணிகளும் கண்டு கொள்ளாத சிறப்பான வேகப்பந்து வீச்சாளரை ஆர்சிபி பிடித்து வந்திருக்கிறது.
இதையும் படிங்க : கம்பீர் கிரெடிட் திருடினார்.. ஆனா பஞ்சாப்ல ஸ்ரேயாஸ்க்கு பாண்டிங் செஞ்சது வேற – கவாஸ்கர் விமர்சனம்
கிரிக்கெட்டில் உயரமான வீரர்களில் ஒருவரான பிளசிங் முசரபாணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 70 போட்டிகளில் 78 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இவர் ஒரு ஓவருக்கு 7.02 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார். இதேபோல ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டில் 118 போட்டிகளில் விளையாடி 127 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இதிலும் இவர் ஒரு ஓவருக்கு 7.25 ரன்கள் மட்டுமே கொடுத்திருக்கிறார். எனவே இவர் உயரம் மற்றும் வேகத்தால் கொண்டுவரும் பவுன்சர் கேசில்வுட் போலவே சிறப்பாக இருக்கும். எனவே ஆர்சிபி அசத்தலான ஒரு வீரரை தூக்கி வந்திருக்கிறது!