தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அணியின் வெற்றிக்கான கிரெடிட் கிடைப்பதாக சுனில் கவாஸ்கர் கௌதம் கம்பீரை தாக்கி பேசியிருக்கிறார்.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணி முதல் முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இதற்கு முன்பாக இரண்டு முறை மட்டுமே அந்த அணி தகுதி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
சாதனை கேப்டன் ஸ்ரேயாஸ்
ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரையில் டெல்லி, கொல்கத்தா மற்றும் பஞ்சாப் என மூன்று அணிகளுக்கு கேப்டனாக இருந்து வழி நடத்தி இருக்கிறார். இவர் வழி நடத்தி உள்ள மூன்று அணிகளையும் பிளே ஆப் சுற்றுக்கு கொண்டு சென்று இருக்கிறார். ஐபிஎல் வரலாற்றில் இதை செய்த ஒரே கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் தற்பொழுது ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாக டி20 வடிவத்திற்கு ஏற்ற வகையில் விளையாடி வருகிறார். முன்பு அவர் அதிரடியாக விளையாடுவதில் சில சிக்கல்கள் இருந்தது. ஆனால் தற்போது டாப் ஆர்டரில் எவ்வளவு வேகத்தில் விளையாட வேண்டுமோ அந்த அளவிற்கு அதிரடியாக அவரால் விளையாட முடிகிறது.
ஸ்ரேயாஸ்க்கு கிரெடிட் கிடைக்கிறது
இந்த நிலையில் கடந்த முறை அவர் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இருந்த போதிலும் அந்த அணியின் மென்டராக இருந்த கௌதம் கம்பீருக்கே கிரெடிட் மொத்தமாக சென்றது. அணியை களத்தில் நின்று வழிநடத்திய ஸ்ரேயாஸ் ஐயருக்கு கிரெடிட் கிடைக்கவில்லை. மேலும் அவரை அந்த அணி நிர்வாகம் தக்கவைக்கவும் இல்லை.
இதையும் படிங்க : ஓபனா சொன்னா… நான் அந்த ஒரு விஷயத்தை சரி செஞ்சே ஆகணும்.. கில் எனக்கு இதுல உதவி பண்றாரு – சாய் சுதர்சன் பேட்டி
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும் பொழுது “கடந்த ஐபிஎல் சீசனின் வெற்றிக்கான கிரெடிட்டை ஸ்ரேயாஸ் ஐயர் பெறவில்லை. எல்லாப் புகழும் வேறொருவருக்கு கொடுக்கப்பட்டது. களத்தில் நடுவில் நடக்கும் விஷயங்களில் கேப்டன்தான் அதிக பங்கு வகிக்கிறார். வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நபர் கிடையாது. இந்த முறை அவருக்கு நியாயமான கிரெடிட் கிடைக்கிறது. மேலும் ரிக்கி பாண்டிங்க்கு எல்லா கிரெடிட்டும் செல்லவில்லை” என்று கூறியிருக்கிறார்.






