145 ரன்.. சீன் வில்லியம்ஸ் சாதனை சதம்.. ஆப்கன் டெஸ்ட் தொடர்.. 4 ஜிம்பாப்வே வீரர்கள் சிறப்பான பேட்டிங்.. முழு விவரம்

0
474

ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்று பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடும் வருகிற நிலையில் டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வே முதல் டெஸ்ட்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சென்று அங்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த இரண்டு அணிகளுக்கு இடையே தொடங்கிய முதலாவது போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பென் கரன் மற்றும் ஜெ கும்ப்ளே களமிறங்கினார்கள்.

விக்கெட் கீப்பர் கும்ப்ளே 9 ரன்னில் ஜட்ரானின் பந்துவீச்சில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கரன் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 74 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 11 பௌண்டரியோடு 68 ரன்கள் குவித்து கஜன்ஃபார் பந்துவீச்சில் வெளியேற அதற்குப் பிறகு மூன்றாவது வரிசை பேட்ஸ்மேன் கைட்டானோ களமிறங்கினார். பொறுமையான ஆட்டத்தை எதிர்கொண்ட அவர் 115 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 46 ரன்கள் அடித்து வெளியேறினார்.

- Advertisement -

ஜிம்பாப்வே வீரர் அபாரம்

மிடில் வரிசை பேட்ஸ்மேன் சீன் வில்லியம்ஸ் ஒரு முனையில் நிலைத்து நின்று ஆட, அடுத்த பேட்ஸ்மேன் மேயர்ஸ் 38 பந்துகளை எதிர்கொண்டு 27 ரன்கள் அடித்து வெளியேறினார். அதற்குப் பிறகு சீன் வில்லியம்சுடன் கேப்டன் எர்வின் களம் இறங்கி இந்த ஜோடி நிலைத்து நின்று ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சிறப்பாக விளையாடியது.

இதையும் படிங்க:முதல் பந்தில் விக்கெட்.. அறிமுக போட்டியிலேயே சாதனை.. தென் ஆப்பிரிக்க வீரர் அபாரம்.. பாகிஸ்தான் முதல் டெஸ்ட்

இதில் சிறப்பாக விளையாடிய மிடில் வரிசை பேட்ஸ்மேன் சீன் வில்லியம்ஸ் 161 பந்துகளில் 9 பௌண்டரி மற்றும் 3 சிக்சர் என 145 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்கிறார். இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு ஐந்து சதங்கள் அடித்து அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இணைந்துள்ளார். அவருக்கு பக்கபலமாக கேப்டன் எர்வின் 94 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்டரியுடன் 56 ரன்கள் குவித்த நிலையில் அவரும் களத்தில் இருக்கிறார். இதனால் 85 ஓவரில் 4 விக்கெட் 363 ரன்கள் ஜிம்பாப்வே அணி குவித்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணித்தரப்பில் கஜன்பர் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -