முதல் பந்தில் விக்கெட்.. அறிமுக போட்டியிலேயே சாதனை.. தென் ஆப்பிரிக்க வீரர் அபாரம்.. பாகிஸ்தான் முதல் டெஸ்ட்

0
262

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா அணியின் சிறப்பான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு ஆட்டம் இழந்துள்ளது.

இதில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் கார்பின் போஸ் தனது முதல் டெஸ்டிலேயே சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிற நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாபிக்க அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன் படி பேட்டிங் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு முதல் மூன்று வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை.

பாபர் அசாம் 4 ரன்னில் வெளியேற, பாகிஸ்தான் அணியின் மிடில் வரிசை பேட்ஸ்மேன் கம்ரான் குலாம் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 71 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 8 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 54 ரன்கள் குவித்து ஓரளவு பாகிஸ்தான் அணி நிமிரச் செய்தார். அதற்குப் பின்னர் வந்த வீரர்களில் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 27 ரன் மற்றும் அமீர் ஜமால் 28 ரன் அடிக்க பாகிஸ்தான் 211 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதில் தென்ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சில் டேன் பீட்டர்சன் 16 ஓவர்கள் வீசி 4 ஓவர்கள் ரன்கள் எதையும் விட்டுக் கொடுக்காமல் 61 ரன் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். மற்றும் மற்றொரு வீரரான கார்பின் போஸ் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் தனது முதல் போட்டியில் விளையாடும் கார்பின் போஸ் தனது முதல் பந்திலேயே பாகிஸ்தான் கேப்டன் ஷான்மசூத் விக்கெட் வீழ்த்தி சர்வதேச கிரிக்கெட்டில் தனது அறிமுக போட்டியின் முதல் பந்தியிலேயே விக்கெட் எடுத்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய 25வது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார். அதற்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸ் துவங்கியது.

இதையும் படிங்க:ஒரு கோச்சா சொல்றேன்.. விராட் ரோஹித் பழைய மாதிரி வர.. இதை மட்டும் செஞ்சா போதும் – அபிஷேக் நாயர் பேட்டி

இதில் தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய மார்க்ரம் நிலைத்து நின்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த டோனி 2 ரன், ரிக்கல்டன் 8 ரன் மற்றும் ஸ்டப்ஸ் 9 ரன்னில் வெளியேறினார்கள். 67 பந்துகளை எதிர்கொண்ட துவக்க வீரர் மார்க்ரம் 67 பந்துகளை எதிர் கொண்டு 47 ரன்கள் உடன் களத்தில் இருக்க கேப்டன் பவுமா 4 ரன்னில் களத்தில் இருக்கும் நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. எனவே தென் ஆப்பிரிக்கா சிறப்பாக விளையாடி பாகிஸ்தான் அணியை விட முன்னிலை பெறுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -