நாளை போட்டியில் இந்த நட்சத்திர இந்திய வீரர் ஆட மாட்டார்.. கடைசி நேரம் முடிவு.. மோர்கல் வெளியிட்ட தகவல்

0
0

​நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் காயம் குறித்து அணியின் பவுலிங் கோச் மோர்னே மோர்க்கல் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

​நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய அணி பலத்த காற்று வீசும் சவாலான சூழலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

- Advertisement -

​இதுகுறித்து மோர்னே மோர்க்கல் பேசும்போது, “இஷான் நன்றாகவே தேறி வருகிறார். அவர் இன்று பயிற்சி செய்வார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெறும் போட்டியில் அவர் விளையாட கிடைக்க மாட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

​தொடர்ந்து அவர் மேலும் பேசுகையில், “இந்தக் காற்று ஒரு வித்தியாசமான சவாலாகும். நான் காலையில் ஹோட்டலில் இருந்தபோது முழு கட்டடமும் ஒருவிதமாக நடுங்கியது. எனவே விரைவான இடைவெளியில் வீரர்கள் பழகிக்கொள்ள நாம் நமது புத்தகங்களில் சேர்க்கப் போகும் புதிய விஷயமாக இது இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், இஷான் கிஷன் முதல் போட்டியின் போது ஏற்பட்ட வலியில் இருந்து மீண்டு வருவதாகவும், மேட்ச் ஃபிட்னஸ் முழுமையாகப் பெறாததால் அவர் அக்டோபர் 27 அன்று வெலிங்டனில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -