ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடிப்பேன் – ஜிம்பாப்வே வீரர் அறிவிப்ப!

0
2037
Ryan burl

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகவும், டி20 தொடரை 4-1 எனவும் கைப்பற்றியிருந்தது. இதையடுத்து இந்திய நட்சத்திர வீரர்களை கொண்ட அணி ஆகஸ்டு இருபத்தி ஏழாம் தேதி துவங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் கலந்து கொள்வதற்காக யுனைடெட் அரபு எமிரேட்ஸ் சென்றிருக்கிறது!

இதற்கு நடுவில் ஷிகர் தவான் தலைமையிலான ஒரு இளம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. ஆனால் தற்போது சில நாட்களுக்கு முன்பு இதில் ஒரு மாற்றமாக, கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ஷிகர் தவானை மாற்றி கேஎல் ராகுல் அணியில் சேர்த்து அதோடு அவரை கேப்டனாகவும் அறிவித்திருந்தது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியில் கே எல் ராகுல் ஆவேஸ் கான் இருவரும் ஆசிய கோப்பை அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். மற்ற வீரர்கள் யாரும் ஆசிய கோப்பை அணியில் இல்லை. சுப்மன் கில், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ருதுராஜ், ராகுல் திரிபாதி ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

பங்களாதேஷ் அணி இரு வாரங்களுக்கு முன்னால் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இந்த இரண்டு தொடர்களையும்2-1 என ஜிம்பாப்வே அணியிடம் பங்களாதேஷ் அணி இழந்தது.

பங்களாதேஷ் அணியுடனான தொடரில் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராஸா, இன்னொசண்ட், ரியான் பர்ல் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்கள். இதில் இன்னொசன்ட் ஒருநாள் தொடரில் ஒரு சதத்தையும், சிகந்தர் ராஸா இரண்டு சதத்தையும் விளாசி இருந்தார்கள். டி20 தொடரில் ரியான் பர்ல் ஒரே ஓவரில் 34 ரன்கள் விளாசி மிரட்டி இருந்தார்.

- Advertisement -

தற்போது ரியான் பர்ல் தனது ஆசை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறும் பொழுது ” இடது கை ஸ்பின்னர்களின் ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடிக்க நான் முயற்சி செய்வேன். ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்களை அடித்த அதே வழியில் நானும் அடிக்க முயற்சி செய்வேன். யுவராஜ் ஒரு லெஜெண்ட் வீரர்” என்று தனது ஆசையை தெரிவித்திருக்கிறார்!