இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதிக் கொள்ளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பாக ஜிம்பாப்வே அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸ் இரண்டு அணி வீரர்கள் குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.
இரண்டு அணிகளுக்கும் இடைப்பட்ட இந்த தொடர் நாளை ஆரம்பித்து அடுத்தடுத்து நடைபெற்று ஜூலை 14ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்திய அணிக்கு கேப்டனாக சுப்மன் கில், ஜிம்பாவே அணிக்கு கேப்டனாக சிக்கந்தர் ராஸா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் அபிஷேக் ஷர்மா, ரியான் பராக், ஹர்ஷித் ராணா மற்றும் துருவ் ஜுரல் ஆகியோருக்கு முதல் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் t20 உலகக் கோப்பை தொடரில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் இருக்கிறார். டி20 உலகச் சாம்பியன் என்கின்ற பட்டத்துடன் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இந்த நிலையில் ஜிம்பாப்வே பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸ் பேசும்பொழுது “சிக்கந்தர் ராஸா போன்ற ஒரு வீரர் முன் நின்று அணியை வழிநடத்துவது எங்களின் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். அவர் எங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கிறார். அவர் முன்னணியில் இருந்து அணியை வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். மேலும் அவர் டிரெஸ்ஸிங் ரூமில் வீரர்களை அரவணைத்து செல்கிறார்.அவரால் பேட் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட முடியும்.
சுப்மன் கில் மிகச் சிறந்த வீரர். நான் தென் ஆப்பிரிக்க அணியில் பயிற்சியாளராக இருந்த பொழுது அவரை ஒரு டெஸ்ட் தொடரில் பார்த்திருக்கிறேன். இந்திய அணியில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அவரின் தயாரிப்புகள் எப்படி இருந்தது என்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையில் அவர் ஒரு அற்புதமான வீரர்.
இதையும் படிங்க : என்னை மோசமா கொச்சைப்படுத்தினாங்க.. அதுக்கு பதில் சொல்ல இந்த முடிவ எடுத்தேன் – ஹர்திக் பாண்டியா பேட்டி
மேலும் இந்திய அணியில் ரிங்கு சிங், சிவம் துபே மற்றும் ரியான் பராக் மூவரும் மிகவும் ஆபத்தான இளம் வீரர்கள்.இவர்கள்தங்களை நிரூபித்து இந்திய அணியில் வாய்ப்பு பெற்று வருகிறார்கள். உண்மையில் நாங்கள் வளரும் இடத்தில் இருந்து ஒரு பெரிய அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்பது கனவு. எனவே இந்திய அணிக்கு எதிராக நாங்கள் விளையாடி எங்களை நிரூபிக்க அருமையான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.