இன்று இந்திய அணிக்கு எதிரான பெரிய போட்டியில் ஜிம்பாபே அணி டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியில் தோல்வியடையும் அணி அரைஇறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறிவிடும். மேலும் இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
முதல் சுற்றில் தாங்கள் இடம் பெற்றிருந்த பிரிவில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் ஜிம்பாப்வே அணி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றது. மேலும் பலமான ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
இதற்கு அடுத்து இரண்டாவது சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 250க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக் கொடுத்து 100க்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த ஒரு போட்டியில் அடைந்த தோல்வி அவர்களால் அரையிறுதிக்கு முன்னேற முடியாது என்று காட்டுவதாக உள்ளது..
இதுகுறித்து சிக்கந்தர் ராஸா பேசும்பொழுது “இங்கு இருப்பவர்களில் எத்தனை பேர் நாங்கள் அரையிறுதிக்கு வருவோம் என நினைக்கிறீர்கள் என்று நான் கேட்டதற்கு ஒரே ஒருவர்தான் கையை உயர்த்தினார். எனவே நாங்கள் உங்கள் நம்பிக்கையையும் மரியாதையையும் பெறுகின்ற அளவுக்கு இன்னும் சிறப்பாக செயல்படவில்லை என்பதை புரிந்து கொள்கிறேன்”
இதையும் படிங்க : பாவம் அவரு.. இந்த இக்கட்டான நிலையில் அவர் மனசுல என்ன நினைக்கிறார்னு தெரியல – அஸ்வின் ஆதங்கம்
“எங்களை இந்த மாதிரி விஷயங்கள்தான் ஊக்குவிக்கும். நாங்கள் அரை இறுதிக்கு செல்வோம் என ஒருவர் மட்டும் கையை உயர்த்தினார் நாங்கள் அந்த அளவுக்கு மட்டுமே முன்னேறி இருக்கிறோம். நீங்கள் அனைவரும் கையை உயர்த்தும் அளவுக்கு நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அது எப்போதாவது ஒரு நாள் நடக்கும் ; அதுதான் என்னுடைய கனவு” என்று கூறி இருக்கிறார்.