பாவம் அவரு.. இந்த இக்கட்டான நிலையில் அவர் மனசுல என்ன நினைக்கிறார்னு தெரியல – அஸ்வின் ஆதங்கம்

0
6

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள சூப்பர் 8 போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோத இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

டி20 உலக கோப்பையை பொறுத்த வரை இந்திய அணி தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. லீக் சுற்று வரை ஒரு தோல்வியை கூட சந்திக்காத இந்திய அணி சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் 76 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. இந்திய அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்று நடைபெற உள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

அதற்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே மற்ற அணிகளின் நிலைமையை பொறுத்து இந்திய அணி அரையிறுதி வாய்ப்பு குறித்து விவாதிக்க முடியும். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் பேட்டிங் வரிசை குறித்து சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய டி20 அணியின் துணை கேப்டன் ஆக அறிவிக்கப்பட்ட அக்ஷார் பட்டேல் கடந்த போட்டியில் விளையாடாமல் போனது தோல்விக்கு மிக முக்கியமான காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் தொடக்க இடத்தில் அபிஷேக் ஷர்மாவும் தடுமாறி வருவதால் அவரது இடத்தில் மீண்டும் சஞ்சு சாம்சனை விளையாட வைக்க வேண்டும் என்கிற கருத்துக்கள் பரவி வரும் நிலையில் அது குறித்து அஸ்வின் சில விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் போது “அபிஷேக் தொடர வேண்டுமா? அல்லது இல்லையா என்பது ஒரு சரியான கேள்வி. ஆனால் இப்போது மாற்றங்களை செய்வது அணியின் சூழலுக்கு எந்த அளவிற்கு நல்லது என்று எனக்கு தெரியவில்லை. அணியில் விளையாடும் வீரர்கள் ஹீரோக்கள், அவர்களுக்குள் சந்தேகங்கள் இருந்தால் தங்களால் சிறந்ததை அவர்களால் செய்ய முடியாது. இந்த நிலையில் துணை கேப்டனை நாங்கள் வெளியே விட்டு விட்டோம் இதனால் அவரது மனதில் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை” என அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -